Wednesday, January 12, 2011

இந்தியாவை ஆட்டிப்படைத்த ஊழல்கள்

இரண்டாம் ஐக்கிய முற்போக்கு அரசின் கற்பை மூன்று ஊழல்கள் பலாத்காரம் செய்திருக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள், ஸ்பெக்டரம் எனும் அலைகற்றை விற்பனை, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆகிய மூன்று ஊழல்கள் கடந்த மாதம் சுனாமி வேகத்தில் சுழன்றடித்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை சுமக்காத கட்சிகளோ, ஆட்சிகளோ இந்தியாவில் இல்லை எனலாம். மக்களும் ஊழலை பொருட்படுத்தி ஒரு அரசை தேர்ந்தெடுப்பதாக இல்லை.

சந்தர்ப்பவாதம், சமூகவியல் சூழல், சாதிய வாக்கு வங்கி, சிறுபான்மை பாதுகாப்பு, தேர்தலிலும் அதன்பின்னரும் ஏற்படும் கூட்டணி சூத்திரங்களே ஐந்தாண்டுக்கொரு முறை அரசை தேர்ந்தெடுக்கும் முக்கிய காரணங்களாக மாறிப்போனதால் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வது அரசுக்கு ஆபத்தான ஒரு செயலாக இல்லை.

அரசின் எந்த ஒரு திட்டமும் ஊழல் கலக்காமல் நிறைவேறவழியில்லை. திட்டங்கள் தீட்டினால் ஊழலில் சம்பாதிக்காலம் என்பது ஒரு அரசியல் வாய்ப்பாடு. யார் யாருக்கு எத்தனை சதவீதம் வேண்டும் என்பதில் தான் பிரச்சனை.
மேலும் படிக்க

No comments: