மக்காவுக்கு அடுத்ததாக புனிதம் பெற்ற பூமியே மதீனாவாகும். இதுவும் வஹீ இறங்கிய பூமி. ஜிப்ரீல் அதிகம் இறங்கிய பூமி. இதுதான் இறுதியில் ஈமான் போய் தங்குமிடம். முஹாஜிர்களும், அன்ஸார்களும் ஒன்றுகூடிய இடம். அதுதான் முஸ்லிம்களின் முதலாவது தலைநகரம். இங்கிருந்துதான் இஸ்லாத்தின் ஒளியைத் தாங்கிய இறைத் தூதரின் கடிதங்கள் அடுத்தடுத்த நாடுகளின் தலைநகரங்களுக்குச் சென்றன. இங்கிருந்துதான் ‘ஹிதாயத்’ எனும் ஒளி உலகமெல்லாம் பிரகாசித்தது.
இந்த பூமிதான் இறைத் தூதருக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஹிஜ்ரத் பூமி. இங்குதான் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தார்கள்; இங்குதான் வாழ்ந்தார்கள். இங்குதான் மரணித்தார்கள். இங்குதான் அடக்கப்பட்டார்கள். இங்கிருந்துதான் அவர்கள் எழுப்பப்படுவார்கள். இந்த இடத்தில் உள்ள நபியவர்களது கப்ருதான் மறுமையில் முதன்முதலாவதாகத் திறக்கப்படும். இவ்வாறு இந்த மதீனா பூமிக்கு எண்ணற்ற ஏற்றங்களும், சிறப்புகளும் காணப்படுகின்றன. இந்தப் புனித பூமியின் சிறப்புகளையும், அங்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் சுருக்கமாக நோக்குவோம்.மேலும் படிக்க
No comments:
Post a Comment