அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆகும்? பிரெஞ்சு புரட்சியை பார்த்தவர்கள் யாராவது இப்போது இருக்கிறார்களா ? சோவியத் ரஷ்யாவின் புரட்சி, மாவோவின் தலைமையில் செஞ்சீன புரட்சி… லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ. சைமன் போலிவர் உள்ளிட்ட புரட்சி தளபதிகளின் தலைமையில் வெடித்த பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி, இன்றும் கூட அமெரிக்கர்களை உறக்கத்திலும் புலம்பவைக்கும் வியட்நாமியர்களின் வீர புரட்சி என வெற்றி பெற்ற புரட்சிகளானாலும் சரி ,ஷேய்க் அஹ்மது யாசீன் , ஹசனுல்பன்னா , அபு முசஃப்பல் ஜர்காவி போன்ற சீரிய ஆளுமைகளின் தலைமையில் எதிர்காலத்தில் வெற்றி பெற்றே தீரும் என நம்பிக்கை ஊட்டி கொண்டிருக்கும் புரட்சிகளை பார்க்காதவர்கள் என அனைவரும் மக்கள் எழுச்சி போராட்டங்களை பார்க்க வேண்டும் என ஆசை கொண்டால் துனீசியாவிற்கும் எகிப்திற்கும் ஜோர்தானுக்கும் அல்ஜீரியாவுக்கும் ஒரு நடை சென்று பார்த்து விட்டு வாருங்கள்
அங்கெல்லாம் எரிமலைகள் வெடித்து கிளம்புகின்றன. இத்தனை எரிமலைகள் இவ்வளவு காலமாக எங்கே இருந்தன என கேட்கிறீர்களா? போராடும் மக்களின் உள்ளங்களில் இதுவரை இந்த எரிமலைகள் மையம் கொண்டு இருந்தன.மேலும் படிக்க
No comments:
Post a Comment