Monday, March 21, 2011

படைத்தவனை நோக்கி …!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை காலைக் கதிரவன் எழுப்பினான். சில மணித் துளிகளில் வியாபாரமும் பணிகளும் அவனை விரைவாக அழைத்துச் சென்றன. இலாப, நஷ்ட கணக்குகளுடன் மாலையில் களைப்புடன் வீடு திரும்பியவன், தொலைக்காட்சியில் சற்றுப் பொழுதைப் போக்கி விட்டு உறங்கச் சென்றான். அவன் வாழ்வில் ஒரு நாள் விடைபெற்றது. இதுதான் பெரும்பாலானோரின் வாழ்க்கை. ஒரு முஸ்லிமின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமா?! என்றால் நிச்சயமாக இல்லை.
தினமும் நடைபெறும் ஆன்மீக வியாபாரம்!
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரி (ரலி), நூல்: முஸ்லிம் 381)

No comments: