Monday, March 28, 2011

சமரசமற்ற போராளி சாந்தா சாஹிப்

வரலாறு படைத்த பலர் வரலாற்றில் காணமல் போனது உண்டு. புகழ் பெற்றவர்களையே வரலாற்றாசிரியர்களும் முன்னிறுத்துகிறார்கள். தியாகங்கள் செய்த நாயகர்கள், புகழ் வெளிச்சத்தில் தங்களை காட்டிக் கொள்ளாததாலேயே, பல நேரம் அவர்களது வரலாறுகளும் இருளில் மூழ்கிவிடுகிறது.
அந்த வகையில், ஆங்கிலெயரை எதிர்த்து சமரசமின்றி போராடிய மன்னர் சாந்தா சாஹிப் குறித்து தமிழக வரலாற்றாசிரியர்கள் விரிவாக எழுதவில்லை. ஆற்காடு நவாபாக திகழ வேண்டிய வாய்ப்பை இழந்தவர்தான் சாந்தா சாஹிப்! இவர் ஆற்காடு நவாபாக பதவி பெற்று வலுப்பெற்றிருந்தால் ஆங்கிலெய சாம்ராஜ்யம் தோன்றாமலேயே முடிந்து போயிருந்திருக்கக் கூடும்.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்ற பனிப்போரில் முகம்மது அலியும், சாந்தாசாஹியும் மோதினர். முகம்மது அலியோ ஆங்கிலெயர்களின் அடிமை மன்னராக இருப்பதில் பெருமை கொள்பவர். சாந்தா சாஹிப் அதற்கு நேர் எதிரானவர். ஆங்கிலெயர்களை எதிர்த்து மண்ணுரிமை போரை நடத்திய சமரசமற்ற போராளி!மேலும் படிக்க

Friday, March 25, 2011

கடனால் கலங்கும் நெஞ்சம் – 2

நபித்தோழர்களின் வரலாறு தரும் படிப்பினை
நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டு செயற்பட்ட நபித்தோழர்கள் தங்களுடைய மரணத் தறுவாயிலும் கடன் குறித்து நடந்து கொண்ட முறை மிகச் சிறந்த படிப்பினையாகும்.
கலீபா உமர்(ரலி) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும்போது அபூலுஃலு என்பவன் உமர்(ரலி) அவர்களின் வயிற்றில் பிச்சுவாக் கத்தியால் பலமாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளான உமர் (ரலி) அவர்களின் நிலை மிகவும் மோசமாகியது…மேலும் படிக்க

Tuesday, March 22, 2011

பலஸ்தீனம்: கசிந்தது கள்ளத்தனம்

அரபு நாடுகளின் பிரச்சனைகளில் மையப் புள்ளியாக இருப்பது பாலஸ்தீனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. மேற்குலகின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை விழுங்கியுள்ளதாகவும், அரபு தலைவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் அரபு மக்கள் உணர்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பாலஸ்தீனர்கள் மற்றும் அரபுகளின் மானசீக நகரமாகவும் புனித நகரங்களில் ஒன்றாகவும் நேசிக்கும் ஜெருசலத்தை இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவு ஒன்று ரகசியமாக செய்து கொள்ளப்பட்டதென தகவல் வெளியானால் அந்த நம்பிக்கை துரோகம் எத்துனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும் படிக்க

Monday, March 21, 2011

படைத்தவனை நோக்கி …!

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை காலைக் கதிரவன் எழுப்பினான். சில மணித் துளிகளில் வியாபாரமும் பணிகளும் அவனை விரைவாக அழைத்துச் சென்றன. இலாப, நஷ்ட கணக்குகளுடன் மாலையில் களைப்புடன் வீடு திரும்பியவன், தொலைக்காட்சியில் சற்றுப் பொழுதைப் போக்கி விட்டு உறங்கச் சென்றான். அவன் வாழ்வில் ஒரு நாள் விடைபெற்றது. இதுதான் பெரும்பாலானோரின் வாழ்க்கை. ஒரு முஸ்லிமின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமா?! என்றால் நிச்சயமாக இல்லை.
தினமும் நடைபெறும் ஆன்மீக வியாபாரம்!
மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரி (ரலி), நூல்: முஸ்லிம் 381)

Sunday, March 20, 2011

நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!

நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.
புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.
மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.மேலும் படிக்க

Thursday, March 10, 2011

இந்த கொலைக்கு காரணம்

தில்லியில், நொய்டா பகுதியில், 2008ம் ஆண்டு, மே மாதம் 16ம் நாள் அரூசி தல்வார் என்ற 15 வயது சிறுமியும் அவளது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ்-ம் அரூசியின் வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இந்த வழக்கில் தில்லி காவல்துறை முதல்கட்ட விசாரணை நடத்தியது. அரூசியின் அப்பா ராஜேஷ் தல்வார் தான் கொலையாளி என்றும், கொல்லப்படும் முன்பு அரூசி கற்பழிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை சொன்னது. காவல்துறையின் இந்த அறிக்கை தில்லியில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. பத்திரிக்கையாளர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் காவல்துறை மீது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து 2008, மே 31ல் இந்த வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் படிக்க

Tuesday, March 8, 2011

பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை

முஸ்லிம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.மேலும் படிக்க

Saturday, March 5, 2011

துனீஷியா: அரபுலகை அசைத்த மக்கள் புரட்சி

துனீஷியா ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள நாடு. 99% அரபு மொழி பேசும் முஸ்லிம்களை கொண்ட இந்நாடு 1 1/2 கோடி மக்கள் தொகையை கொண்டது. 1300 கி.மீ கடற்கரையை கொண்ட நீண்ட பாரம்பரிய செழுமை கொண்டது.
கி.பி 6ம் நூற்றாண்டில் பைசாந்தியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்ட இம்மண்ணில் 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் நுழைந்தனர். இஸ்லாத்தை இருகரம் ஏற்று அரவணைத்த இம்மக்கள் அரபு மொழியையும் தமதாக்கி கொண்டனர். பின்னர் பல்வேறு ஏகாதிபத்திய கிறிஸ்துவ நாடுகள் துனீஷியா மீது படையெடுத்தன. இறுதியாக 1574ல் துருக்கி உதுமானிய பேரரசின் மன்னள் இரண்டாம் சலீம் லாகொலேட்டா, (La goleta) துனீஷ் ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் போரில் வெற்றி பெற்று துனீஷியாவை கைப்பற்றினார். உதுமானிய இஸ்லாமிய பேரரசின் ஓர் மாகாணமாக துனீஷியா இருந்து வந்தது.மேலும் படிக்க

Tuesday, March 1, 2011

மைசூர் சிங்கம் – ஹைதர் அலி – 2

கூட்டணியும், சவால்களும்…
ஹைதர் அலியின் நிர்வாகத் திறனும், ஆளுமை பண்புகளும் அவரது புகழை உயர்த்தியது. இளம் வயது மன்னராக இருந்த கிருஷ்ணராஜா ‘பொம்மை’யாக இருக்க, அவரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராஜும், நஞ்சராஜும் சொகுசு வாழ்க்கையில் திளைக்க ஹைதர் அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “மஹாராஜா”வாக வளர்ந்துக் கொண்டிருந்தார்.
பகை எங்கிருந்தாலும் தேடி சென்று முறியடிக்கும் ஹைதர் அலி, அக்கம் பக்கத்து ஆட்சியாளர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார். மராட்டியத்தை சேர்ந்த கோபால்ராவ் என்ற மன்னர் மைசூர் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்தார் குமுறி எழுந்த ஹைதர் அலி, மராட்டிய படையை துவம்சம் செய்து, துரத்தியடித்தார். இது நடந்தது 1758ம் வருடம் என்றும் 1759ம் வருடம் என்றும் வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.மேலும் படிக்க

Sunday, February 27, 2011

அசிமானந்தா கழட்டிவிடப்பட்ட ஏஜென்ட்

சாலை ஓரத்தில், பேருந்தில், ரயில் பயணத்தில், கடை வீதியில் எங்காவது, தொப்பியும் தாடியும் வைத்துள்ள ஒரு முஸ்லிம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் காணப்பட்டால், “பையில் என்ன பாய் வெடிகுண்டா” என்று நக்கலடித்து கேட்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டிருந்தது. பத்திரிகையாளர் முதல் பொதுமக்கள் வரை முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று சொல்லத் தொடங்கினர்.

பிச்சை எடுக்கும் முஸ்லிம் கூட இந்த அவசொல்லுக்கு ஆளாக நேர்ந்தது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நண்பர்களாக சேர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸ்லிம். இந்து பிச்சைக்காரர் முஸ்லிம் பிச்சைக்காரரை தீவிரவாதி என்று, வார்த்தையால் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒருநாள் இந்த சுடு சொல்லால் சூடேறிய முஸ்லிம் பிச்சைக்காரர் கத்தியால் குத்த இந்து பிச்சைக்காரர் கொல்லப்பட்டார். ஊடகங்களும், அரசியல் சக்திகளும் தொடர்ந்து வலியுறுத்திய தீவிரவாதி என்ற பட்டப் பெயர் இரண்டு நண்பர்கள் இடையே பகையையும் ஒரு கொலையையும் உருவாக்கிவிட்டது. இதற்கு காரணமானவர்கள் வருத்தப்பட்டதில்லை. மேலும் படிக்க

Wednesday, February 23, 2011

வெடித்தது மக்கள் புரட்சி மிரண்டது மேற்குலகம்

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆகும்? பிரெஞ்சு புரட்சியை பார்த்தவர்கள் யாராவது இப்போது இருக்கிறார்களா ? சோவியத் ரஷ்யாவின் புரட்சி, மாவோவின் தலைமையில் செஞ்சீன புரட்சி… லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ. சைமன் போலிவர் உள்ளிட்ட புரட்சி தளபதிகளின் தலைமையில் வெடித்த பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி, இன்றும் கூட அமெரிக்கர்களை உறக்கத்திலும் புலம்பவைக்கும் வியட்நாமியர்களின் வீர புரட்சி என வெற்றி பெற்ற புரட்சிகளானாலும் சரி ,ஷேய்க் அஹ்மது யாசீன் , ஹசனுல்பன்னா , அபு முசஃப்பல் ஜர்காவி போன்ற சீரிய ஆளுமைகளின் தலைமையில் எதிர்காலத்தில் வெற்றி பெற்றே தீரும் என நம்பிக்கை ஊட்டி கொண்டிருக்கும் புரட்சிகளை பார்க்காதவர்கள் என அனைவரும் மக்கள் எழுச்சி போராட்டங்களை பார்க்க வேண்டும் என ஆசை கொண்டால் துனீசியாவிற்கும் எகிப்திற்கும் ஜோர்தானுக்கும் அல்ஜீரியாவுக்கும் ஒரு நடை சென்று பார்த்து விட்டு வாருங்கள்
அங்கெல்லாம் எரிமலைகள் வெடித்து கிளம்புகின்றன. இத்தனை எரிமலைகள் இவ்வளவு காலமாக எங்கே இருந்தன என கேட்கிறீர்களா? போராடும் மக்களின் உள்ளங்களில் இதுவரை இந்த எரிமலைகள் மையம் கொண்டு இருந்தன.மேலும் படிக்க

Monday, February 21, 2011

மதீனா நகருக்கு போக வேண்டும்

மக்காவுக்கு அடுத்ததாக புனிதம் பெற்ற பூமியே மதீனாவாகும். இதுவும் வஹீ இறங்கிய பூமி. ஜிப்ரீல் அதிகம் இறங்கிய பூமி. இதுதான் இறுதியில் ஈமான் போய் தங்குமிடம். முஹாஜிர்களும், அன்ஸார்களும் ஒன்றுகூடிய இடம். அதுதான் முஸ்லிம்களின் முதலாவது தலைநகரம். இங்கிருந்துதான் இஸ்லாத்தின் ஒளியைத் தாங்கிய இறைத் தூதரின் கடிதங்கள் அடுத்தடுத்த நாடுகளின் தலைநகரங்களுக்குச் சென்றன. இங்கிருந்துதான் ‘ஹிதாயத்’ எனும் ஒளி உலகமெல்லாம் பிரகாசித்தது.
இந்த பூமிதான் இறைத் தூதருக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஹிஜ்ரத் பூமி. இங்குதான் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தார்கள்; இங்குதான் வாழ்ந்தார்கள். இங்குதான் மரணித்தார்கள். இங்குதான் அடக்கப்பட்டார்கள். இங்கிருந்துதான் அவர்கள் எழுப்பப்படுவார்கள். இந்த இடத்தில் உள்ள நபியவர்களது கப்ருதான் மறுமையில் முதன்முதலாவதாகத் திறக்கப்படும். இவ்வாறு இந்த மதீனா பூமிக்கு எண்ணற்ற ஏற்றங்களும், சிறப்புகளும் காணப்படுகின்றன. இந்தப் புனித பூமியின் சிறப்புகளையும், அங்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் சுருக்கமாக நோக்குவோம்.மேலும் படிக்க

Friday, February 18, 2011

அசிமானந்தா: மனம் உருகினார் மாமா

அஜ்மீர்தர்கா, மக்கா மஸ்ஜித் (ஹைதராபாத்) உள்ளிட்டு நடந்த சில குண்டு வெடிப்புகளுக்கு தான் பொறுப்பேற்பதாக அவ்வழக்குகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருக்கும் அசிமானந்தா எனும் சாமியார் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பின்னணியாக மனம் உருகும் உண்மை சம்பவம் இருந்திருக்கிறது. 80 வருட இந்திய சினிமா வரலாற்றில் கூட இதுபோன்றதொரு கதை புனையப்பட்டதில்லை எனலாம். தரமானதொரு கலைப்படம் பண்ணத்தக்க விதமாக அச்சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் இது “கதையல்ல நிஜம்”.
மேலும் படிக்க

Monday, February 14, 2011

ரம்மியமான ரபீவுல் அவ்வல்

ஹிஜ்ரி ஆண்டின் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் ஓர் ரம்மியமான மாதமாகும்.
ரபீவுல் அவ்வல் என்றால் முதல் வசந்தம் என்று பொருள். இது வசந்தகாலத்தின் துவக்கமாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.
ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று தவறாக எண்ணி மீலாது விழா, மௌலிது ஷரீபு(?) என வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறுவது வாடிக்கை.
மேலும் படிக்க

Saturday, February 12, 2011

‘ஃபத்வா’ ஓர் விளக்கம்

மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே ஃபத்வா என்று கூறப்படும். ஃபத்வா வழங்கும் மார்க்க அறிஞர் முஃப்தி என அழைக்கப்படுவார்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத்(வணக்கம்), இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் கணைகள் எழுவது இயல்பே! எனவே மார்க்க அறிஞர்களிடம் அவற்றுக்கான தெளிவைப் பெறுதல் அவசியமாகின்றது. இந்த வகையில்
மேலும் படிக்க

Friday, February 11, 2011

அரசியல் சூழ்ச்சிகளை முறியடிப்போம்

இஸ்லாம் என்பது உலக நடைமுறை நெறியாகும். இஸ்லாம் மனித வாழ்வின் இலக்காக அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சொர்க்க வெற்றியையும் நிர்ணயித்த போதிலும் அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பை இவ்வுலகில் காண நினைக்கிறது. எனவே இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு இணங்க, இவ்வுலக வாழ்வை தூய்மையானதாக ஆக்கிக் கொள்வது ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாகும்.

தன்னை சீர்திருத்துவது மட்டுமின்றி தான் வாழும் உலகை நெறிமுறைப்படுத்துவதும் தூய்மையாக்குவதும் நீதிமிக்க அரசை நிலை நாட்டுவதும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டமார்க்கக் கடமையாகும். மனித இனத்தை விட்டும் விலகி, காடுகளிலும் மலைகளிலும் குடில் அமைத்து மேற்கொள்ளும் துறவரம்தான் ஆன்மீகத்தின் அடையாளம் என்று கருதும் சித்தாந்தத்தை அடியோடு அப்புறப்படுத்தியது இஸ்லாம்.மேலும் படிக்க

Saturday, January 29, 2011

பந்தங்களை அணைப்பீர்

அலைகள்
என்ன பேசக்கூடும்…
கடல் கடந்த
கணவனின்
கவலை ஓரலை…
மேலும் படிக்க

Wednesday, January 26, 2011

அனாச்சாரங்களால் அரங்கேறிய அவலங்கள் – செய்தி கட்டுரை

இஸ்லாத்தின் எதிரிகளால் உள் நுழைக்கப்பட்ட அனாச்சாரங்களையும் மூட பழக்க வழக்கங்களையும் பிடித்துக்கொண்டு தொங்கும் போக்குகள் எங்குப்பார்த்தாலும் பரவலாக நிறைய காணப்படுகின்றன.
அதுபோல் சென்ற மாதம் ‘முஹர்ரம் படுகளம்’ என்ற பெயரில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நடந்தேறியது:
ஆம்! ஏர்வாடி, முஸ்லிம்கள் பெருவாரியாக வாழக்கூடிய ஓர் பிரபலமான ஊர். இங்குள்ள சிலர் லெப்பை வளவு தெருவிலும், 6வது தெருவிலும் இரண்டு இடங்களை ஏற்படுத்தி ’படுகளம்’ என்ற பெயரில் பற்பல அனாச்சாரங்களை செய்து வருகின்றனர். இதனை செய்வதற்காக ‘முஹர்ரம் கமிட்டி’ என்ற ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.மேலும் படிக்க

Tuesday, January 25, 2011

பெட்டகம்

மாதாந்திர பத்திரிக்கைகளை pdf வடிவில் இங்கே தொகுக்கப்படுகின்றன. இதனை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் தொடுப்பை சொடுக்கவும்.
Right Click, Save Target as the below links to download the files.
2011
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மேலும் படிக்க

எண்ணிய படியே உயர்வோம்!

(மறைந்த இஸ்லாமிய அறிஞர் குர்ரம் முராத் அவர்களின் கட்டுரையைத் தழுவியது)
ஆங்கிலத்தில் Self Development என்றழைக்கப்படும் சுய முன்னேற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானதாக உள்ளது. அனைவரும் சுய முன்னேற்றம் அடையவே விரும்புகிறார்கள். சுய முன்னேற்றத்தை அடைவது எப்படி என்பது குறித்து இன்றைய உலகில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூல் செய்து நடத்தப்பட்டு வருகின்றது. நாம் இத்தொடரில் ஒரு முஸ்லிம் எத்தகைய சுய முன்னேற்றப் பயிற்சியை பெற வேண்டும் என்பதை இன்ஷாஅல்லாஹ் விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க

Sunday, January 23, 2011

மருந்து விலை கொள்(ளையும்)கையும், மக்கள் விரோத அரசும்

இன்றைய சூழலில் உலகை சுருக்கமாக, எளிதாக எப்படி புரிந்து கொள்ளலாம்? வணிக நலனா? மக்கள் நலனா? என வரும்போது எந்தத் துறையை எடுத்தாலும் அது மக்கள் நலனை புறந்தள்ளி வணிக நலனை காக்கும் கொள்கைகளையே ஆளும் கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி, கடைப்பிடிப்பதே நடைமுறை உண்மை!
மருத்துவத் துறையில் எப்படி வணிக நலன் காக்கப்படுகிறது, மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறதுஎனப் பார்ப்போம். மக்கள் பொதுவாக அதிகம் பாதிப்புள்ளாகும் நோய்களுக்கான மருந்தின் மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது முக்கியம்.
மேலும் படிக்க

Monday, January 17, 2011

இமாம்களின் தியாகச் சுவடுகள்

அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி
ஹிஜ்ரீ 1353-ல் ஒரு மிகப்பெரிய அறிஞர் வருகின்றார். ஆம்! அவர்தான் அப்துர் ரஹ்மான் முபாரக்பூரி. இந்தியாவில் பிறந்த அவர்கள் மார்க்கத்தை கற்றுக்கொண்டு இந்த குர்ஆன், சுன்னாவிற்காக செய்த தியாகம் மகத்தானதாகும். திர்மிதீ என்கிற நூலை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நூலிற்கு இமாம் அவர்கள் ஸுஹ்பதுல் அஹ்வதீ என்கிற ஓர் அருமையான விளக்கவுரை நூலை எழுதுகின்றார்கள்.
இந்தியாவில் பிறந்த ஷைக் அவர்கள் எழுதிய இந்த நூல் தான் உலகம் முழுக்க இன்றைக்கு திர்மிதீயின் விரிவுரையாக கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முபாரக்பூரி என்பது இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் உள்ள ஓர் ஊராகும். ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்பூரி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அர்ரஹீக்குல் மக்தூம் என்கிற மிக பிரபலமான (நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) நூலைத் தொகுத்தவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
மேலும் படிக்க

Friday, January 14, 2011

உடைந்த ரகசியங்கள் – Wikileaks (விக்கீ லீக்ஸ்)

இணையதளம் ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகம் இல்லை என்பதை ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் உண்மை படுத்திவிட்டது. பாதுகாப்பின் உச்சம் என்று உலகம் நம்பும் பென்டகனின் ரகசியங்களை நோண்டியிருக்கிறது இந்த இணையதளம்.
16 வயதிலேயே கணிணியின் சகல பரப்பிலும் புகுந்து விளையாடிய ஜீலியன் பால் அசஞ்சே (Julian paul Assa nge) என்ற 39 வயது இளைஞர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விஞ்ஞான தொழில் நுட்பத்தை கொண்டு பக்கம் பக்கமாக களவாடிவிட்டார்.
மேலும் படிக்க

Wednesday, January 12, 2011

இந்தியாவை ஆட்டிப்படைத்த ஊழல்கள்

இரண்டாம் ஐக்கிய முற்போக்கு அரசின் கற்பை மூன்று ஊழல்கள் பலாத்காரம் செய்திருக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள், ஸ்பெக்டரம் எனும் அலைகற்றை விற்பனை, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆகிய மூன்று ஊழல்கள் கடந்த மாதம் சுனாமி வேகத்தில் சுழன்றடித்தன. ஊழல் குற்றச்சாட்டுகளை சுமக்காத கட்சிகளோ, ஆட்சிகளோ இந்தியாவில் இல்லை எனலாம். மக்களும் ஊழலை பொருட்படுத்தி ஒரு அரசை தேர்ந்தெடுப்பதாக இல்லை.

சந்தர்ப்பவாதம், சமூகவியல் சூழல், சாதிய வாக்கு வங்கி, சிறுபான்மை பாதுகாப்பு, தேர்தலிலும் அதன்பின்னரும் ஏற்படும் கூட்டணி சூத்திரங்களே ஐந்தாண்டுக்கொரு முறை அரசை தேர்ந்தெடுக்கும் முக்கிய காரணங்களாக மாறிப்போனதால் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வது அரசுக்கு ஆபத்தான ஒரு செயலாக இல்லை.

அரசின் எந்த ஒரு திட்டமும் ஊழல் கலக்காமல் நிறைவேறவழியில்லை. திட்டங்கள் தீட்டினால் ஊழலில் சம்பாதிக்காலம் என்பது ஒரு அரசியல் வாய்ப்பாடு. யார் யாருக்கு எத்தனை சதவீதம் வேண்டும் என்பதில் தான் பிரச்சனை.
மேலும் படிக்க

Monday, January 10, 2011

‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!

‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்! கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ் மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை! மேலும் படிக்க

சகலமும் நிறைந்த ஸஃபர் மாதம்

ஹிஜ்ரீ மாதங்களான 12 மாதங்களில் ஒன்று ஸஃபர் மாதமாகும். இது ஹிஜ்ரீயின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை அடுத்து வரக்கூடியது.
ஸஃபர் என்றால் காலியாகுதல் என்று பொருள். ஸிஃபர் என்றால் ஒன்றும் இல்லாததற்கு சொல்லப்படும். எண்ணிக்கையில் ஒன்றும் இல்லாததற்கு பூஜியம் என்று தமிழில் கூறுவதுபோல ஆங்கிலத்தில் ஸைஃபர் என்றும் அரபியில் ஸிஃபர் என்றும் கூறுவர்.
ஸஃபர் மாதத்தில் மக்காவை விட்டு மக்காவாசிகள் அனைவரும் வெளியேறி பயணித்து விடுவதால் இப்பெயர் வந்ததாக சிலர் கூறுகின்றனர். முஹர்ரம் மாதம் போர் செய்ய தடுக்கப்பட்ட மாதமாக இருந்ததால் போர் செய்யாமல் இருந்து விட்டு அடுத்து வரக்கூடிய ஸஃபர் மாதத்தில் போருக்காகப் புறப்பட்டு ஊரில் ஒருவர் கூட இல்லாமல் ஊரை காலி செய்து விடுவதால் ஸஃபர் என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸஃபர் மாதம் சம்பந்தமாக நான்கு விஷயங்களை மையமாகக் கொண்டு நமது ஆய்வு அமைகிறது.
மேலும் படிக்க

Friday, January 7, 2011

‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!

‘சமுதாய ஒற்றுமைக்காக’ உழைத்திடுவீர்!
கொள்கை ரீதிதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பிரச்சனைகளும் ஏராளம்! இதனைக் கண்ட, அல்குர்ஆனையும் சுன்னாவையும் முறையாகப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ கொள்கையைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் சிலர்பட்ட கவலையின் வெளிப்பாடுதான் சமுதாய ஒற்றுமை! மாதஇதழ்
மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி எனும் போது முஸ்லிம் சமுதாய பிளவுகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் காரணமாகாது என்பதுதான் சமுதாய ஒற்றுமையின் அசைக்கமுடியாத நம்பிக்கை!
நிச்சயமாக உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம்தான்! நானே உங்கள் இரட்சகன்! எனவே என்னை வணங்குங்கள்! என்ற அல்குர்ஆன் (21:92) வசனம் ஏக இரட்சகனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளையிடுவதுடன், அவனை வணங்கும் முஸ்லிம் சமுதாயமும் ஏகத்துவமாய் திகழவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மேலும் படிக்க

Monday, January 3, 2011

அந்த ஒரு நாளுக்காக…

உரிமை கேட்போரின்
உயிர்களுக்கு
விடுதலை கொடுத்து
அதிகாரத் துப்பாக்கிகளால்
கொண்டாடுகின்றன
ஆனந்த சுதந்திரத்தை…!
மேலும் படிக்க