Thursday, December 2, 2010

வரலாறும், முக்கியத்துவமும்

முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படு கின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும். ‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு வந்தார்கள். அதன் பொறுப்பாளராக அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நியமித் தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்டார்கள். பைத்துல் மால் என்கின்ற பிரயோகம் நபி (ஸல்) அவர்களால் நேரடியாகப் பய்னபடுத்தப்படாவிட்டாலும், கருத்து ரீதியாக அது அவர்களது காலத்தில் இருந்துள்ள தைக் காணலாம். ஸகாத்தை வசூலித்து விநியோகம் செய்தல், இஸ்லாமிய அரசுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடிய முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து பெறப் பட்ட ‘ஜிஸ்யா’ என்ற வரியை வசூலித்து பொது நலனுக்காகப் பயன்படுத்துதல் போன்ற பணிகள் நபி (ஸல்) அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. சேர்க்கப்படும் பொருட்கள் நபி (ஸல்) அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. சில வேளைகளில் மஸ்ஜிதுந் நபவியை ஒட்டியதாக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து உரியவர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும். நபி (ஸல்) அவர்களது காலத்தில் பைத்துல் மால் முக்கியத்துவம் பெறாமல் இருந்தமைக்கு 1. இஸ்லாமிய அரசு அதன் மேலும் படிக்க

No comments: