Monday, December 13, 2010

குர்பானி சட்டங்கள்

இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்கள் உண்டு. ஒன்று நோன்பு பெருநாள், மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இந்த இரண்டு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாளில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாளில் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்தப் பலியிடுவது தான் குர்பானி.
குர்பானி கொடுக்கும் நாட்கள்:
குர்பானியை பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் யார்
தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பராஃ(ரலி) நூல்: புகாரி.
மேலும் படிக்க

No comments: