Monday, December 13, 2010
மன்மோகன் அரசின் ஏமாற்று வித்தை – ஆசிரியர் பக்கம்
வட்டியில்லாமல் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் இயங்குவது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியிடம் கருத்து கேட்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் இஸ்லாமிய வங்கிகள் குறித்து இந்திய ஊடகங்களில் பரபரப்பாக செய்திகளும் வாசகர் கருத்து கணிப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. திரு. மன்மோகன் சிங் நமது நாட்டின் பிரதமர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்படக் கூடியவர். உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியகத்தில் (ஐ.எம்.எப்) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் மிகப் பிரமாண்டமான முறையில் செயல்பட்டு வருவதாகவும் அவை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், ரிசர்வ் வங்கியிடம் இஸ்லாமிய வங்கிகளை இந்தியாவில் இயங்க அனுமதிப்பது குறித்து கருத்து கேட்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் 2004ல் மன்மோகன் சிங் பிரதமராக வந்த பிறகு வட்டியில்லாமல் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல கோரிக்கைள் அவரிடம் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஆனந்த் சின்கா தலைமையில் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வுச் செய்வதற்காக ஒரு செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வட்டியின் அடிப்படையில் இயங்கும் பாரம்பரிய வங்கிகள் மற்றும் வட்டியில்லாமல் இயங்கும் மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment