Sunday, December 5, 2010

கண்ணாடிக் கயிறு

நம் நிலை நன்றாயில்லை காரணம் – நாம் ஒன்றாயில்லை… பிறை மதி காண்பதிலும் குறைமதி நமக்கு.. பிரிவதும், சரிவதும் தொடர்கதை எமக்கு.. ஒரே இறை… எத்தனைக் கூட்டங்கள்… ஒரே மறை… எத்தனைக் குழப்பங்கள்… ஒரே பிறை எத்தனைப் பெருநாட்கள்… மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் தெரியவில்லை நமக்கு மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது… நாம் செண்டுகளைப் பரிமாறும் பெருநாட்களில் ஏகாதிபத்தியம் குண்டுகளை வீசுகிறது… பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம் எரியும் ஈராக் கருகும் காஷ்மீர் பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் ரத்தம்… இருந்தும் திருந்தவில்லை இன்னும் நம் சித்தம்… வேத வார்த்தையை வாழ்க்கையாய் ஆக்கும் கடமை மறந்தோம் கொடுமை அடைந்தோம்… நம் நிலை நன்றாயில்லை காரணம் – நாம் ஒன்றாயில்லை… இறைவனின் கயிறை ஒன்றாகப் பற்றினாலே சமுதாய ஒற்றுமை உருவாகும்… நம்மில் சிலர் ஒற்றுமை என்னும் கயிறு திரித்தார்கள்… பிறகு ஒற்றுமையாய் இருப்பதில்லை என்பதில் மட்டுமே ஒற்றுமையாய் இருந்தார்கள்… ஒருவருக்கொருவர் நாம் கண்ணாடிகள் ஆனால் எப்போதும் நமக்குள் கல்வீச்சுக்கள்… ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் காலமெல்லாம் நாம் கதறினோம்… இதயத் துணிகளை இணைத்துத் தைக்க பெருமானார் தந்து சென்றது வேத நூல் நம் கைகளிலோ இப்போது பிரிவினைக் கத்தரிக்கோல் சிறு சிறு துளிகள் நிலத்தில் மூழ்கும் பெரு வெள்ளத்தில் இந்த நிலமே மூழ்கும் வெள்ளம் என்பது நீரின் ஒற்றுமை… இருளிலும், காற்றிலும் ஒரு சுடர் நடுங்கும் சூரிய வருகையில் காரிருள் அடங்கும் சூரியப் பேரொளி ஒளியின் ஒற்றுமை… ஓலை விசிறி மேலும் படிக்க

No comments: