Monday, December 6, 2010

விஞ்ஞான வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு!

நவீன விஞ்ஞானம் விண்ணை முட்டும் அளவு வளர்ந்து விட்டது. அறிவியல் துறை கண்களை அகல விரித்து வியப்புடன் பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த அறிவியல் எழுச்சி, விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்தாக நின்று உழைத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்பது முஸ்லிம்கள் பலருக்கும் தெரியாத செய்தியாகும். அறிவியலுடைய, விஞ்ஞானத்துடைய வரலாறு பற்றிப் பேசும் எவரும் இஸ்லாத்துடைய, முஸ்லிம்களுடைய பங்களிப்புப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. மத்திய காலத்தில் அறிவியலின் வளர்ச்சி என்பது முஸ்லிம்களின் வரலாற்றில்தான் தங்கியிருந்தது. இருள் அகற்றிய அறிவு தீபம்: நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்க ஆரம்பித்த காலம் அரேபிய வரலாற்றில் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா (அறியாமைக் காலம்) என வர்ணிக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் 500 – 1500 உட்பட்ட காலம் ‘மத்திய காலம்’ என்றும், ‘இருண்ட யுகம்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதி இருள் சூழ்ந்த காலப் பகுதியாகக் காணப்பட்டது. இஸ்லாத்தின் எழுச்சியும், முஸ்லிம்களின் அறிவுத் தேடலும்தான் இருள் படிந்திருந்த உலகுக்கு அறிவு தீபம் ஏற்றி ஒளி கொடுத்தது. அறிவியலின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாகக் கொக்கரிக்கும் ஐரோப்பிய – அமெரிக்க நாடுகள் அன்று நாகரீகமோ, பண்பாடோ, நல்ல பழக்க – வழக்கங்களோ தெரியாமல் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்தன. ஐரோப்பாவின் நிலை: இஸ்லாம் வளர்ச்சி கண்ட போது முஸ்லிம் உலகும், ஐரோப்பிய உலகும் எப்படி இருந்தன என்பது பற்றி விக்டர் ராபின்ஸன் (victor Rabinson) தனது ‘மருத்துவத்தின் கதை’ (The Story of Medicine) மேலும் படிக்க

No comments: