Sunday, December 5, 2010

காவி பயங்கரவாதம்

‘‘இஸ்லாமிய பயங்கரவாதம்’’ என்ற வார்த்தையை இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலித்து வந்தன. அதன் எதிரொலிதான் இப்போது வில்லங்கமாக வெளிப்பட்டிருக்கிறது.
அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் (டிஜிபி) மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை தலைவர்கள் இடையே உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், ‘‘காவி பயங்கரவாதம் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’’ என்று கூறினார். ஒரு உள்துறை அமைச்சர் என்ற வகையில், அவருக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்ப டையில் காவி பயங்கரவாதம் பற்றி பேச அதிகம் உரிமையுடைவர் ப. சிதம்பரம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கைகள் பலவற்றில் நமக்கு முரண் உள்ளபோதிலும், மதவெறி சக்திகளை கண்டறிவதில் அரசு தெளிவாக இருப்பது சமீபத்திய சம்பவங்களால் உணர முடிகிறது. எனினும், குஜராத் போலி என்கவுண்டர் சதிகள் தொடர்பில் மோடி தலைமையிலான பாஜக அரசு சிக்கி சின்னா பின்னமாகி வரும் வேளையில், ‘அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா’, ‘விலைவாசி ஏற்றம்’ போன்ற சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் பாஜக கிளப்பாமல் இருக்க, வெளிப்பட்டு வரும் காவி பயங்கரங்கள், போலி என்கவுண்டர்கள் போன்ற சர்ச்சைகளை காங்கிரஸ் மௌனமாக விட்டுவிட வேண்டும் என்று இரு தரப்புக்குமிடயே அதிகாரப்பூர்வமற்ற கமுக்க உடன்பாடு ஏற்பட்டிருப் பதாக ஊடகங்கள் கசிய விட்டு வரும் செய்திகள் பொய்த்து விட வேண்டும் என்பதே நம் விருப்பம். அது உண்மையாக இருந்துவிடுமானால், சிறுபான்மையினர் வாக்குகளால் தான் ஆட்சி அமைக்க முடிந்தது என்று மேலும் படிக்க

No comments: