Thursday, December 2, 2010

பெருமானார் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள்

கற்பித்தலின் போது ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு. 1. கேட்பவர்களை சோர்வடையச் செய்யாமல் இருத்தல், 2. சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும், எளிமையாகவும் சொல்லுதல். நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறையும் இவ்வாறுதான் அமைந்திருந்தது. தனது உரைகளின் போது நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் விரல்விட்டு எண்ணிக் கொள்ளும் அளவுக்கு மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். & பெரும்பாலும் மிக நீண்ட சொற்பொழிவாக அவர்களின் பேச்சுக்கள் அமையாது. சுருக்கமாகவும், சுற்றி வளைக்காமலும், தெளிவான வார்த்தைகள் கொண்டதாகவும் இருக்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த பெரும்பாலான செய்திகளை நபித் தோழர்களால் ஒருமுறை கேட்ட உடனேயே இலகுவாக மனனம் செய்ய முடிந்தது. ஏன் நம்மால் கூட பல ஹதீஸ்களை அதன் மூல அரபி மொழியில் இலகுவாக மனனம் செய்ய முடிவதற்கும் இதுதான் காரணம். அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் தன்னுடைய மாணவர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று மட்டும் பாடம் நடத்தக் கூடியவர்களாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவரு டைய மாணவர்களோ கல்வியின் மீது கொண்ட அதிக ஆர்வத்தால் தினமும் தங்களுக்கு பாடம் கற்பிக் குமாறு வேண்டுகிறார்கள். ஆனால் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களோ, “இல்லை! நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு காட்டித் தந்த வழிமுறை இதுதான். நீங்கள் சோர்ந்துபோய் அதன் காரணமாக கற்பதில் ஆர்வம் காட்டாது போய் விடுவீர்களோ என்ற அச்சம் மட்டும் மேலும் படிக்க

No comments: