தீர்ப்புகள் திருத்தப்படட்டும் :- செப்டம்பர் 30: இந்திய நீதிமன்ற வரலாற்றின் கருப்பு தினம் |
---|
பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதிமன்ற வரலாற்றின் ஒரு கரும் புள்ளியாக அமைந்துள்ளது. ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணங்கள், வருவாய் பதிவேடுகள் மற்றும் சட்டப்பூர்வமான ஆதாரங்களுக்கு பதிலாக வெறுமனே ஹிந்துக்களின்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்திற்கு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. டிசம்பர் 6, 1992 எப்படி ஒரு கருப்பு தினமோ அதே போல் விடுதலைப் பெற்ற இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் செப்டம்பர் 30ம் ஒரு கருப்பு தினமாகும்.
450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமாக இருந்த பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கே கோயில் கட்ட சங்பரிவார் அமைப்பினர் தங்கள் மதநம்பிக்கையை தான் முன்வைத்தார்கள். உச்சநீதிமன்றம் பாபர் பள்ளிவாசல் கட்டடத்திற்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று போட்டிருந்த தடை உத்தரவை காலில் போட்டு மிதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கினார்கள். இத்தனை பாதகச் செயல்களையும் அவர்கள் செய்ததற்கு தங்கள் மதநம்பிக்கைத் தான் காரணம் என்று கூறினார்கள். அவர்களது இக்கொடுஞ் செயலை நியாயப்படுத்தும் வகையில் தான் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும் படிக்க
No comments:
Post a Comment