Wednesday, December 22, 2010

மாவீரன் மருத நாயகம்

சென்ற மாதத் தொடர்ச்சி... (பாகம்-1)

சென்ற மாதத் தொடர்ச்சி... (பாகம்-2)

சிவகங்கை சிக்கல்

ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள். குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.

அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.

சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா... வம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.
மேலும் படிக்க

No comments: