Tuesday, November 30, 2010
மகிழ்ச்சியும் மார்க்கம்தான்!
Monday, November 29, 2010
சுன்னாவின் ஒளியில் பெருநாள்
அமைதியைத் தேடி…
Friday, November 26, 2010
கண்ணீர் தேசம்… காஷ்மீரின் வரலாறு
கல்லெறியும் இளைஞர்களும்… இராணுவ அணிவகுப்பு நடத்தும் இந்திய அரசும்
Tuesday, November 23, 2010
போர்க்கள புயல்… திப்பு சுல்தான் – 2
Sunday, November 21, 2010
இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு!
Saturday, November 20, 2010
பர்தாவே பாதுகாப்பு
ஹிஜாப்
(அல்குர்ஆன் 24:31)
மேலும் படிக்க
மேற்குலகை அச்சுறுத்தும் ஆயுதம்! ஹிஜாப்
இஜ்திஹாத் – ஓர் ஆய்வு
Thursday, November 18, 2010
கர்ப்பிணிகள் நோன்பு வைக்கலாமா-?
பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள்.
இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சில தற்காப்புகளை கடைபிடிக்க வேண்டும்.
பகல் நேரங்களில் அதிகமாக ஓய்வெடுக்க வேண்டும். து£க்கத்தின் மூலமாகவோ, அமைதியாக இருப்பதன்
மூலமாகவோ ஓய்வினை மேற்கொள்ள வேண்டும். வேலைகளுக்குச் செல்பவர்களாக இருந்தால், ஒரு பக்கம் வேலைக்கு சென்று கொண்டு, ஒரு பக்கம் வாந்தியும் எடுத்துக் கொண்டு, ஒருபக்கம் நோன்பு வைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். அதனால் இது போன்ற சமயங்களில் அவர்கள் அதிகளவு ஓய்வெடுக்க முயற்சிக்க வேண்டும். நோன்பு துறந்தவுடன் எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக பால், தண்ணீர், ஜூஸ் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
வேர்கள் காய்ந்தாலும் இலைகள் உதிர வேண்டாம்
Sunday, November 14, 2010
பிறை ஒரு பிரச்சனையா?
பிறை ஒரு பிரச்சனையா? - பல அறிஞர்களின் கருத்துக்கள்
- பிறையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் (தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர்)
- ‘‘பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்க வேண்டும்’’ எஸ். கமாலுத்தீன் மதனீ (மாநிலத் தலைவர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்)
- ‘‘சமூக ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும்’’ டாக்டர். ஆர்.கே நூர் மதனீ (இயக்குனர், இப்னுல் கைய்யூம் இஸ்லாமிய ஆய்வுக் கூடம், சென்னை)
- தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்பதே சமூக ஒற்றுமைக்கு உகந்தது! முஃப்தி உஸ்மான் ஹஜ்ரத் (வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி தலைமை முஃப்தி)
- ‘‘கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்!’’ முனைவர். அப்துல்லாஹ் ஜோலம் உமரி மதனீ (முதல்வர், ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரி, உமராபாத்)
- சந்திரக் கணக்கே சரியானது! அலி மனிக்ஃபான் (விண்ணியல் ஆய்வாளர், பிறையியல் நிபுணர்)
- ‘‘பிறையால் ஏற்படும் சமூகக் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும்!’’ மௌலவி முஹம்மது கான் பாக்கவி (தலைமை எடிட்டர், ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை)
- பெருநாளில் பிளவுகள் வேண்டாம் - இணைந்தே கொண்டாடுவோம்! அப்துல் லத்தீஃப் உமரி (ஜித்தா)
- ‘‘ஒற்றுமையில்தான் சமூகப் பாதுகாப்பு!’’ ஹஜ்ரத் இக்பால் காஸிமீ (முதல்வர், வேலு£ர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்)
- ‘‘பிறை பற்றி மறுமை நாளில் நான் விசாரிக்கப்படுவேன் என்ற பொறுப்புணர்வு எனக்குண்டு!’’ டாக்டர். முஃப்தீ காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப், (தமிழக அரசு தலைமை காஜி, சென்னை)
- பிழையில்லா பிறைக் காலண்டர் வரும் வரை அரசு காஜியின் அறிவிப்பையே ஏற்க வேண்டும்! மௌலவி எஸ். கே. சம்சுதீன் (குவைத்) தொழிலதிபர்
பிறையைப் பார்த்து நோன்பு நோற்று பிறையைப் பார்த்து நோன்பை விடுவதே தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் நிலைபாடு! இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை! ஜமாஅத்துல் உலமா சபைக்கும் அரசு தலைமை காஜிக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இரு தரப்பும் இணைந்தே பிறை தொடர்பாக முடிவெடுக்கின்றோம்.
ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவராக செயல்பட்டுவருபவருக்கு பிறைபற்றி தகவலை தெரிவிக்கும் பொறுப்பு ஜமாஅத்தால் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுப்பும் தகவலை பரிசீலித்த பிறகு, அதனை தலைமை காஜிக்கு தெரிவிக்கின்றோம். அவர்கள் அதனை மக்களுக்கு அறிவிக்கின்றார்கள்.
பிறை விஷயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் தொலை பேசிகளில் வரும் தகவல்களை அங்குள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு உறுதி செய்ய வேண்டி யுள்ளது. சில சமயங்களில் பிறை அறிவிப்பு கால தாமதமாவதற்கு இதுவே காரணம்.
இந்த வருடம் ஷஅபான் பிறை பார்க்கப்பட்டு ஜூலை 27ம் தேதி ஷஅபான் பிறை 15 என்று ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதியில் இரவு 9 மணிக்குள் ரமளான் பிறை பற்றி அறிவிப்புச் செய்யும் முயற்சியில் உள்ளோம்.
மேலும் படிக்க
Saturday, November 13, 2010
பெருநாள் மகிழ்ச்சியைத் தேடி…
Friday, November 12, 2010
வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்
ரமளான் மாதத்தில் சுவன வாயில்கள் திறக்கப் பட்டு, நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. வணக்கங் களுக்கு ஏனைய காலத்தில் வழங்கப்படும் நன்மை களை விட பன்மடங்கு அதிகமாக வழங்கப்படு கின்றன. பாவமன்னிப்பும் நரக விடுதலையும் அளிக் கப்படுகின்றன. நல்வழி நோக்கிப் பயணிப்பதற்கு பல வாயில்கள் திறந்துவிடப்படுகின்றன. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் பெற்றிருப்பதற் குக் காரணம் இம்மாதத்தில் அல்குர்ஆன் அருளப்பட்ட துதான்.
‘நிச்சயமாக நாம் அதனை(அல்குர்ஆனை) பாக்கிய முள்ள இரவில் இறக்கினோம்”. 1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்’ (அல்குர்ஆன் 44:3, 97:3) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் படிக்க
Monday, November 8, 2010
Tanzil : Quran Navigator
http://tanzil.info/
Browse, Search, and Listen to the Holy Quran. With accurate quran text and quran translations in various languages.
Tanzil : Quran Navigator
Sunday, November 7, 2010
இது நினைவூட்டும் நேரம்!
உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்!
Saturday, November 6, 2010
வாழ்க்கை ஓர் அமானிதம்
போர்க்கள புயல்… திப்பு சுல்தான்
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன். மேலும் படிக்க
சொந்த ஊருக்கு! Agnosticim அறியவொணாக் கொள்கை
மேலும் படிக்க
அவதூறுகளின் பின்னணியில்… விமர்சனங்கள் – விளக்கங்கள்
மேலும் படிக்க
இஸ்ராவும் மிஃராஜும்
அரபியில் ‘இஸ்ரா’ என்பது இரவில் பயணம் செய்வதைக் குறிக்கும். ‘அல் இஸ்ரா’ என்பது நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவில் ஜிப்றீல்(அலை) அவர்கள் மூலமாக மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
மேலும் படிக்க
பள்ளிவாசலில் பெண்கள் மத்ஹப் நூல்களிலிருந்து…
அதே சமயம் முதிய பெண்மணி ஃபஜ்ர், மக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளில் கலந்து கொள்வதை இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் குறைகாணவில்லை.
மாலிக்கி மத்ஹப் அறிஞர்கள் கூற்றுப்படி, ஆண்களின் இச்சைக்கு ஆளாகும் பருவத்தை தாண்டிய பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவது ஆகுமானதே! அதே போல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வாலிபப் பெண் வருவதும் ஆகுமானதே! விரும்பத்தகாத பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படும் பெண்மணி பொதுவாக (எந்த வயதாக இருந்தாலும்) வரக் கூடாது.
மேலும் படிக்க
பள்ளிவாசலில் பெண்களா?
Friday, November 5, 2010
மருத்துவ துறையின் விபரீதங்கள்
மேலும் படிக்க
போபால்: அநீதி இழைக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதை
போபால் துயரம்
20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கோர அழிவு என்றால் அது போபால் விஷவாயு தாக்குதலாகும். போபால் விஷவாயு தாக்குதல் துயரம் இருபதாம் நூற்றாண்டின் மூன்று சோக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அமெரிக்க வான்படை விமானங்கள் வீசிய அணுகுண்டு வீச்சுக்கு அடுத்த படியாக போபால் விஷவாயு தாக்குதல் இரண்டாம் இடம் பெறுகிறது.
ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சுக்கு அடுத்தபடியாக போபால் விஷவாயு சம்பவமும் ரஷ்யாவின் செர்ணோபில் அணுக் கரு உலை விபத்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.
மேலும் படிக்க
போபால் விபரீதமும் & சுற்றுச்சூழல் பாதுகாப்பும்
மனிதர்களுக்கு பெரும் ஆபத்தாக விளங்கும் இந்த பாதகச் செயல்கள் குறித்து நாம் பாராமுகமாக இருக்க இயலாது. நாம் வாழும் பூவுலகை காப்பாற்றுவது நமது இன்றியமையாத கடமையாகும். எனவே தான் பூவுலகின் சுற்றுச் சூழலை பாதுகாக்க ஏராளமான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை புறக்கணித்து வரம்பு மீறி வாழ்ந்தவர்களின் கதி என்னவானது என்பது குறித்தும் திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது:
மேலும் படிக்க
காய்கள் கனியட்டும்! கனவுகள் மலரட்டும்!
கண்ணியமும் உயர்வும் பாதுகாப்பும் சமுதாய ஒற்றுமையின் நிழலில்தான் கிடைக்கும் என்ற வரலாற்றுச் சுவடுகள் சமுதாய ஒற்றுமையை வாழ்வின் இலட்சியமாக்கின.
முஸ்லிம் சமுதாயத்திடையே நீண்ட காலமாக ஏற்பட்ட பிளவும் பிரிவினையும் சமுதாய பலத்தை குன்றச் செய்தன, எதிரிகள் அதன் மீது ஆதிக்கம் செலுத்த பாதை அமைத்தன என்பதை முஸ்லிம்கள் மறக்கவில்லை.
மார்க்கச் சட்டங்களை சமூகப் பிளவுக்கு காரணமாக்கி எதிரிகள் வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஏகத்துவக் கொள்கை முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டே தீரும் என உட்புறத்திலிருந்து சில தீய குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் படிக்க
வாழ்க்கை ஓர் அமானிதம்
உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் -& மனிதர்களில் எல்லா சாராருக்கும் மூன்று வகையான வாழ்க்கையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
கடவுளை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும், ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் பல கடவுளர்கள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் அனைத்து வகை மனிதர்களுக்குமே மூன்று வகையான வாழ்க்கையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
அதிலொன்று & நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கக் கூடிய ‘துன்யா’ எனும் இவ்வுலக வாழ்க்கை. இது அற்ப வாழ்க்கை.