Saturday, November 13, 2010
பெருநாள் மகிழ்ச்சியைத் தேடி…
மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடான சட்டங்களை அணுகும் முறை தவறி, ஒரு வகையினர் மற்ற வகையினரை விமர்சிக்கும் போக்கு சமூகத்தில் ஆரோக்கியமில்லா சூழலுக்கு வழிவகுக்கிறது. நாட்களையும், மாதங்களையும் தீர்மானிப்பதற்கு சூரியக் கணக்கு-சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தை சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொறுத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். 29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும். அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக் கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 என முடிவதாக தீர்மானிக்கப்படும். சிலவேளை தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30&ஆக பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் பிறை என்பது பெரும் குழப்பம் ஏற்படும் அம்சமாக மாறிவிட்டது. பிறைபார்த்து நோன்பு வையுங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! என்ற நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு தத்தமது பகுதி யில் பிறை மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment