Sunday, November 21, 2010

இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு!

இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் மனமும் சுவையும் உண்டு. அதற்குரிய சுவை மாறி, வேறொரு சுவை வந்துவிட்டால் அப்பொருளின் தன்மை மாறிவிட்டது, அது கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தமாகிவிடும். அவ்வாறே இறை நம்பிக்கைக்கும் (ஈமானுக்கும்) ஒரு சுவையுண்டு. ஒரு மனமுண்டு. அவை கெட்டுப் போய்விட்டால் அது கெட்டுப் போய்விடும். சுவை, ருசி மாறுபடுவதை வைத்து பொருள் கெட்டுப் போய்விட்டதை உணர்கிறோம். கெட்டுப் போன, புளித்துப்போன பொருளை நாக்கில் வைத்தவுடன், முகம் சுளித்து, உடலில் நடுக்கம் உண்டாகிறது. அவ்வாறே ஒருவரது இறை நம்பிக்கை (ஈமான்) கெட்டுப் போய்விட்டால் அவரது சொல், செயல்களில் மாற்றம் உண்டாகிவிடும். முதலில் அவரது உள்ளத்தில், மாற்றம் ஏற்பட்டுவிடும். அவரது நோக்கமும் மாறிவிடும். எவர் எல்லா அம்சங்களிலும், இறைபொருத்தத்தை நோக்கமாக கொண்டாரோ அவரது இறைநம்பிக்கை கெட்டுப் போகவில்லை. அவர் அதன் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிவிடும். இதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மதை தூதராகவும் ஏற்றுக் கொண்டவர் இறைநம்பிக்கையின் சுவையை ருசித்தவராவார். (முஸ்லிம்) ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. மாறாக அவனை இரட்சகனாகவும் (ரப்பாகவும்) ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ரப்பு என்றால் ஒரு பொருளை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, பராமரிப்பதற்குச் சொல் லப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ப்பதால் அவர்களுக்கும் ரப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “”என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்புடன்) என்னை அவர்கள் மேலும் படிக்க

No comments: