Friday, November 12, 2010

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

‘‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பது மான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்குர்ஆன் 2:185)
ரமளான் மாதத்தில் சுவன வாயில்கள் திறக்கப் பட்டு, நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. வணக்கங் களுக்கு ஏனைய காலத்தில் வழங்கப்படும் நன்மை களை விட பன்மடங்கு அதிகமாக வழங்கப்படு கின்றன. பாவமன்னிப்பும் நரக விடுதலையும் அளிக் கப்படுகின்றன. நல்வழி நோக்கிப் பயணிப்பதற்கு பல வாயில்கள் திறந்துவிடப்படுகின்றன. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் பெற்றிருப்பதற் குக் காரணம் இம்மாதத்தில் அல்குர்ஆன் அருளப்பட்ட துதான்.
‘நிச்சயமாக நாம் அதனை(அல்குர்ஆனை) பாக்கிய முள்ள இரவில் இறக்கினோம்”. 1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்’ (அல்குர்ஆன் 44:3, 97:3) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் படிக்க

No comments: