Monday, November 29, 2010

அமைதியைத் தேடி…

அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவை ஒவ்வொரு தனி மனிதனின் தேட்டமாக ஒழுக்க மாண்புகளாகத் திகழ்ந்தாலும் உண் மையில் அவை மனித சமூக பொதுச் சொத்துதான். மனதால் எண்ணி மகிழ்வதற் குக் கூட இன்னொருவர் தேவைப்படுகிறார் எனும் போது அவை சமூகச் சொத்தாகவே கணக்கிடப்படுகின்றன. அவைகளை பேணிக் காப்பது ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பொறுப்பாகும். தனிமனிதன் தன் அமைதியை கெடுத்துக் கொண்டால் உண்மையில் அவன் தன்னு டைய அமைதியை மட்டும் கெடுக்கவில்லை, பொது அமைதியையும் சேர்த்தே கெடுக்கின் றான். இதனால் அங்கே அரசாங்கத் தலையீடு அவசியமாகிறது. புகை பிடித்தல் என்பது தனிமனித உரிமை என்றாலும் பொது இடங்களில் புகைப்பதற்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு காரணமும் இதுதான். மனித உயிர், உடமை, கண்ணியம், அறிவு, மார்க்கம் ஆகியவற்றின் பாதுகாப்பு அரண்தான் இஸ்லாம். மனிதன் இவ்வுலகில் உயிருக்குப் பய மின்றி வாழ வேண்டும்! அறிவுடனும் சிந்திக் கும் ஆற்றலுடனும் வாழ வேண்டும்! கற்பும் கண்ணியமும் பேணி வாழ வேண்டும்! அவ னுடைய செல்வங்களும் உடமைகளும் பாது காக்கப்பட்ட நிலையில் வாழ வேண்டும்! இஸ்லாத்தை பேணி நடக்கும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும்! ஆக மனிதன் இவ்வுலகில் அச்சமற்றவனாக, நிம்மதியாகவும் மகிழ்ச்சி யாகவும் வாழவேண்டும் என்பதுதான் இஸ் லாமியச் சட்டங்களின் அடிப்படை நோக்க மாகும். ஒரு உயிரைக் காப்பாற்றுபவன் ஒட்டு மொத்த மனித இனத்தையே காப்பாற்றிய வனாவான், அநியாயமாக ஒரு உயிரைக் கொலை செய்பவன் ஒட்டு மொத்த மனித இனத்தையே மேலும் படிக்க

No comments: