Sunday, November 14, 2010

பிறை ஒரு பிரச்சனையா?

பிறை ஒரு பிரச்சனையா? - பல அறிஞர்களின் கருத்துக்கள்




"பிறையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் (தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர்)"


பிறையைப் பார்த்து நோன்பு நோற்று பிறையைப் பார்த்து நோன்பை விடுவதே தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் நிலைபாடு! இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை! ஜமாஅத்துல் உலமா சபைக்கும் அரசு தலைமை காஜிக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இரு தரப்பும் இணைந்தே பிறை தொடர்பாக முடிவெடுக்கின்றோம்.



ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவராக செயல்பட்டுவருபவருக்கு பிறைபற்றி தகவலை தெரிவிக்கும் பொறுப்பு ஜமாஅத்தால் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுப்பும் தகவலை பரிசீலித்த பிறகு, அதனை தலைமை காஜிக்கு தெரிவிக்கின்றோம். அவர்கள் அதனை மக்களுக்கு அறிவிக்கின்றார்கள்.

பிறை விஷயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் தொலை பேசிகளில் வரும் தகவல்களை அங்குள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு உறுதி செய்ய வேண்டி யுள்ளது. சில சமயங்களில் பிறை அறிவிப்பு கால தாமதமாவதற்கு இதுவே காரணம்.



இந்த வருடம் ஷஅபான் பிறை பார்க்கப்பட்டு ஜூலை 27ம் தேதி ஷஅபான் பிறை 15 என்று ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதியில் இரவு 9 மணிக்குள் ரமளான் பிறை பற்றி அறிவிப்புச் செய்யும் முயற்சியில் உள்ளோம்.
மேலும் படிக்க

No comments: