Saturday, November 20, 2010
இஜ்திஹாத் – ஓர் ஆய்வு
வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அனைத்துக் காலங்களிலும் மனித இனம் முழுமைக் கும் நன்நெறி வகுத்தளித்த அற்புத மார்க்கம் இஸ் லாம். அதில் சட்டத் திருத்தங்கள் இல்லை. அதற்கான தேவையுமில்லை. அதற்கான அனுமதி உலகில் எந்த மனிதருக்கும் எக்காலத்திலும் வழங்கப்படவுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக அல்லாஹ் வகுத்தளித்த நெறிதான் இன்றுவரை இஸ்லாமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. யுக முடிவு நாள்வரை அந்நெறியே இஸ்லாத்தின் நன்னெறி யாகத் திகழும். நாள்தோறும் உலகில் பிறக்கும் எண்ணிலடங்கா மாற்றங்களை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்கி றது?! என்ற கேள்வி, இமைகளை மூட தடையாய் அமைந்துள்ளது உண்மைதான்! 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ‘இதற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை’ என்ற பட்டியல் காலியாகவே தொங்கிக் கொண்டி ருக்கிறது. இதில் மிகவும் ஆச்சரியமான மற்றொரு தகவல் என்னவென்றால் முன்னேற்றத்தின் அடுத்த டுத்த கட்டத்திற்கு மனிதனை இஸ்லாம் விரைவாக அழைத்துச் செல்வதுதான்! பிறந்த வேகத்திலேயே இறந்த போன இஸங்க ளுக்கு மத்தியிலும் ஆன்மீகத்தை மட்டுமே போதித்துக் கொண்டிருக்கும் மதங்களுக்கு மத்தியிலும் இஸ்லாம் தனது தனித்துவத்தை 14 நூற்றாண்டுகளாக நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் தரும் முக்கியத்துவமே இதன் பிரதான காரணம் எனலாம். அறிவியல் முன்னேற்றங்களை மனித இன பாது காப்பு விதிகளால் வார்த்தெடுக்கும் இஸ்லாம், மனித சிந்தனையில் தோன்றும் கசடுகளை களையெடுத்து, தூய்மையாக்கி, தெள்ளிய நீரோடையாய் ஆரோக்கிய மான மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment