Sunday, November 7, 2010
இது நினைவூட்டும் நேரம்!
சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு. நரக வாயில்கள் அடைக்கப்படும் புனித ரமளான் மாதம் நம்மை வந்தடைந்துவிட்டது. அளவில்லா நற்கூலியை அள்ளித் தரும் நல்லறங்களை கடைபிடிக்கவும், பாவமன்னிப்பைப் பெறவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் செயல்பட தயாராகி விட்டீர்களா? அப்படியானால் முதலில் ரமளான் மாத வணக்கங்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்! பிறகு அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று திட்டமிடுங்கள்! கடந்த வருட ரமளானை எவ்வாறு கழித்தீர்கள் என்ற மீள்பார்வையும் மிக அவசியம்! இன்று ஒரு நோன்பு முடிந்து விட்டது, இரண்டு நோன்புகள் முடிந்து விட்டன என்று பொதுக்கணக்குப் போடாமல், இன்றைய தினத்திற்கான இபாதத்களை முறையாக நிறைவேற்றியுள்ளேனா? என்று தினமும் சுயக் கணக்குப் பார்க்க வேண்டும். முஃமினின் ஒவ்வொரு நாளும் நன்மைகளை அதிகரிக்கவும் தீமைகளை விட்டுத் தவ்பாச் செய்யவும் பயன்பட வேண்டும் என்ற நபிமொழியை மறந்துவிடக் கூடாது. மறுமையில் அல்லாஹ்வினால் விசாரிக்கப்படுவதற்கு முன் தினமும் நீங்களே உங்களை விசாரித்துக் கொள்ள வேண்டும்! இன்றைய தினம் நோன்பு வைத்தீர்களா? இரவுத் தொழுகையை நிறைவேற்றினீர்களா? அந்தத் தொழுகை அமைதியாகவும் நீண்டதாகவும் அமைந்திருந்ததா? இன்றைய தினம் குறைந்தது ஒரு ஜுஸ்வு அளவாவது அல்குர்ஆனை ஓதி விட்டீர்களா? இந்த ரமளானில் அல்குர்ஆனை குறைந்தது ஒரு தடவையாவது முழுமையாக ஓதி முடித்திட முடிவு செய்துவிட்டீர்களா? சஹர் நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுதீர்களா? அந்நேரத்தில் பாவமன்னிப்புத் தேடினீர்களா? நோன்பு துறக்கும் நேரத்தில் துஆச் செய்தீர்களா? தங்களால் முடிந்த பொருட்களைக் கொண்டு பிறர் நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா? இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment