Sunday, November 7, 2010

உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்!

பெருநாட்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் தொடர்பான காரியமாக இருப்பதால் அது பற்றி இஸ்லாமிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் இத்தகைய பணிக்காக அரசாங்கத் தால் நியமிக்கப்பட்டுள்ள இஸ்லாமியத் துறைகளின் அறிவிப்புகளை ஏற்று அந்நாட்டு மக்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு அரசாங்கத்தால் எந்தத் துறையும் ஏற்படுத்தப்படாவிட்டால் அந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றுகூடி இத்தகைய பணிக்காக ஒரு இஸ்லாமியத் துறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறுதான் சவூதி அரேபிய அரசாங்க மார்க்கத் தீர்ப்பு கமிட்டியும் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளது. பெருநாட்கள்தான் முஸ்லிம்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் அடையாளச் சின்னம்! ஊர் மக்கள் அனைவரும் தக்பீர் கூறியவர்களாக பெருநாள் திடலுக்குப் புறப்பட்டு, இபாதத்களை நிறைவேற்ற வேண்டும். தொழுகை கடமையிலிருந்து விதிவிலக்குப் பெற்ற மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் திடலுக்கு வர வேண்டும். திடலுக்குப் புறப்பட ஹிஜாப் ஆடை இல்லாத பெண்களுக்கு பிற பெண்கள் தங்களின் மேலதிக ஆடைகளை வழங்கியாவது அவர்களை திடலுக்கு அழைத்து வர வேண்டும். அங்கு மகிழ்ச்சியையும் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தங்களிடையே பரிமாறிக் கொள்ளவேண்டும். பெருநாள் தினத்தன்று முஸ்லிம் ஏழைகள் உணவின்றி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஏழைகளின் உணவான ஃபித்ரா (பெருநாள் தர்மம்) வழங்க வேண்டும். பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்து, ஆண்களும் பெண்களும் கண்டு களித்திடலாம். நல்ல கருத்துள்ள பாடல்களை சிறார்கள் மேலும் படிக்க்

No comments: