Saturday, November 6, 2010

வாழ்க்கை ஓர் அமானிதம்

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் -& மனிதர்களில் எல்லா சாராருக்கும் மூன்று வகையான வாழ்க்கையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். கடவுளை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும், ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் பல கடவுளர்கள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் அனைத்து வகை மனிதர்களுக்குமே மூன்று வகையான வாழ்க்கையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அதிலொன்று & நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கக் கூடிய ‘துன்யா’ எனும் இவ்வுலக வாழ்க்கை. இது அற்ப வாழ்க்கை. மனைவிக்காகவும்,மக்களுக்காகவும் சேமித்து வைத்திருக்கக் கூடிய நாம் மறுமை நாளில் நமக்காக என்ன சேமித்து வைத்தோம் என்று சிந்திக்க வேண்டும். காலம் காலமாக உட்கார்ந்து தின்னும் அளவிற்கு சொத்து சேர்த்து வைப்பது புத்திசாலித் தனமா–? தனக்காக & மறுமைக்காக நன்மைகளை சேர்த்து வைப்பது புத்திசாலித்தனமா? இரண்டாவது & மனிதன் மரணித்த பின் சந்திக் கக்கூடிய ‘கப்ர்’ எனும் மண்ணறை வாழ்க்கை மூன்றாவது & மனிதன் சந்திக்கவிருக்கும் நிலையான, நித்திய வாழ்க்கையாக இருக்கக்கூடிய & வெற்றியையும் தோல்வியையும் பெறப்போகும் மறுமை வாழ்க்கை. இம்மூன்று வகை வாழ்க்கையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் வாழ்ந்து வரக்கூடிய இவ்வுலக வாழ்க் கையை எல்லா மனிதர்களுக்கும் ஓர் அமானிதமாக தந்திருக்கின்றான்-. அல்லாஹ் அமானிதமாக தந்திருக்கின்ற இவ்வுலக வாழ்வைப் பற்றி திருமறைக்குர்ஆனில்… இவ்வுலக வாழ்க்கை மனிதனை ஏமாற்றக்கூடிய ஓர் சிற்றின்பமே அன்றி வேறில்லை என்கிறான். இவ்வுலக சிற்றின்பத்தை கண்டு மேலும் படிக்க

No comments: