‘மிஃராஜ்’ (விண்ணகப் பயணம்) என்பது நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த மகத்தான அற்புத நிகழ்ச்சியாகும். உலக வரலாற்றின் ஓட் டத்தையே பிடித்து நிறுத்திய ஒப்பற்ற நிகழ்வு களில் இதுவும் ஒன்றாகும். நபி(ஸல்)அவர்களது இஸ்லாமியப் பிரச்சார இயக்கத்தின் மறுமலர்ச் சிக்கும், மகத்தான மாற்றத்திற்கும் இந்நிகழ்ச்சி முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம்.
அரபியில் ‘இஸ்ரா’ என்பது இரவில் பயணம் செய்வதைக் குறிக்கும். ‘அல் இஸ்ரா’ என்பது நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவில் ஜிப்றீல்(அலை) அவர்கள் மூலமாக மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment