Thursday, December 23, 2010
எல்லைக் கோடுகள் மாறும் பாலஸ்தீனம் மலரும்
புதைகுழி
முஸ்லிம்களுக்கு முகவரி.
பைத்துல் முகத்தஸ் அது
எங்கள் மூன்றாம் புனிதஸ்தலம்,
எதிர்கால பாலஸ்தீன நகரம்
ஒரு நாள்
எல்லைக் கோடுகள்
மாற்றியமைக்கப்படும்.
அகதிகளாய்
தேசத்தை தாண்டிய
நதிகளாய் வாழும்
பாலஸ்தீனர்களின்
கொடிகள் அங்கே பறக்கும்.
மேலும் படிக்க
தன்மானப் போரில் சுதந்திரம் மலரும்!
பிறவி போராளிகள்!
அவர்கள் நெருப்பையும்
எரிக்கும்
நெருப்புகள்.
எதிரிகளோடு
போராடுவதே
அவர்களது வாழ்க்கை!
அது, அடக்குமுறைக்கு
பணியாத
சுதந்திர வேட்கை!
எதிரிகளால்
வெடிகுண்டுகளை
வீச முடியும்.
இவர்களால்
வெடி மருந்துகளாகவே
மாற முடியும்.
பதுங்கு குழிகள்தான்
மேலும் படிக்க
நேரத்தை முறைப் படுத்துவோம்
- ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multi tasking) சமீபகாலங்களில், பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
Wednesday, December 22, 2010
மொபைல் போன்களால் உருவாகும் ‘நோமொபோபியா’!
இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றையதலைமுறையினர் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
மேலும் படிக்க
மாவீரன் மருத நாயகம்
சென்ற மாதத் தொடர்ச்சி... (பாகம்-2)
சிவகங்கை சிக்கல்
ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள். குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.
அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா... வம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.
மேலும் படிக்க
Tuesday, December 21, 2010
இனிது, இனிது ஈமான் இனிது…
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏனைய அனைவரைவிடவும் அவருக்கு விருப்பத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனை அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்
நெருப்பில் வீசப்படுவதை ஒருவன் எப்படி வெறுப்பானோ அதே போன்று குஃப்ர் (இறை மறுப்புக்கு) திரும்புவதை அவன் வெறுக்கவேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இம்மூன்று பண்புகளும் ஈமானியப் பண்புகளில் மிக உயர்ந்தவையாகும் அவற்றைப் பூரணப்படுத்துபவர் ஈமானின் இனிமையையும் சுவையையும் பெற்றுக் கொள்வார்.
மேலும் படிக்க
அலைபேசி அருமைகளும், அவலங்களும்…
1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.
மேலும் படிக்க
Monday, December 20, 2010
வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்
ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.
மேலும் படிக்க
புனித கஃபாவும், அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களும்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புனர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம்(அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் கொண்டு வந்து, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்க பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் இருந்து புரிய முடிகிறது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
மேலும் படிக்க
இமாம்களின் தியாக சுவடுகள்
மார்க்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு அல்லாஹ்வினுடையது:
இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்கும்; இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தவிடு பொடியாக்கி மார்க்கத்தை இந்த பூமியில் மேலோங்கச் செய்வதற்கும் உரிய மாபெரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். ஆகவே அந்தப்பணிகளுக்கு ஏற்ற, தகுந்த மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டேயிருக் கின்றான்.
மேலும் படிக்க
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்: முஹர்ரம்
ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன.
நபி(ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. அனைவரிடத்திலும் ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற அளவிலேயே கணக்கிடப்படுகின்றன.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 9:36)
மேலும் படிக்க
பாபர் மஸ்ஜித் விவகாரம்: போராட்டங்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்
1992 டிசம்பர் 6 ஆம் நாள், அந்த கறுப்பு ஞாயிற்றுக்கிழமையில் நடந்து முடிந்த அந்த பயங்கரவாதம், இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தியாவின் அரசியல் கண்ணியத்தையும், இந்தியர்களின் சகிப்புத்தன்மையையும் சர்வதேச அளவில் நிலைகுலைய வைத்த அந்நிகழ்வு, இன்று வரை அழியாத வரலாற்று கரையாக நிலைத்து விட்டது.
1924 ஆம் வருடம் உருவான ராஷ்பீரியம் சேவாசங்கம்தான் (ஆர்.எஸ்.எஸ்) காவி பயங்கவாதத்தின் தாய் மடியாக இன்று வரை மிரட்டி வருகிறது. காந்தியடிகளின் படுகொலையை முன்னின்று நடத்திய இவ்வியக்கம்தான், பாபர் மஸ்ஜித் தகர்ப்புக்கும் காரணமாக இருந்தது. அதன் ஆன்மீக பிரிவான விஸ்வ ஹிந்து பரிஷத் தும், அரசியில் பிரிவான பா.ஜ.கவும், வன்முறை, பிரிவான பஜ்ரங்தளமும் தான் பல்வேறு குறுக்கு வழிகளில் இச்சதி செயலை செய்து முடித்தன.மேலும் படிக்க
Thursday, December 16, 2010
புரோடொகால்: உலகளாவிய சதி
ஏன் கம்யூனிஸ்டுகள் கூடுகிறார்கள்? ஏன் இறை நம்பிக்கை குறைகிறது? இதற்கெல்லாம் பின்னால் ‘அவர்கள்’ இருக்கிறார்கள். ‘அவர்கள்’ ரகசியமாகக் கூடுகிறார்கள். நம்மையெல்லாம் அடிமைகளாக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இதுவரை வெறும் ஊகங்களாகப் பேசப்பட்டு வந்த இந்த விஷயத்துக்கு இதோ ஆவண ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.
‘அவர்கள்’ விரிவாக உருவாக்கிய சதித் திட்டத்தின் ஆவணங்கள் உலகப் பத்திரிகை வரலாற்றில் முதன்முதலாக!
மேலும் படிக்க
லண்டன்: டோனி பிளேரின் மைத்துனி இஸ்லாமானார்
உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார்.
அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லாரன் பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
மேலும் படிக்க
இஸ்லாம் ஃபோபியா பீதியில் மேற்குலம்
ஜெர்மனி
ஜெர்மனியும் இஸ்லாம் ஃபோபியாவெனும் மட சிந்தனையில் இருந்து தப்பவில்லை . மேற்கு ஐரோப்பா பரப்பில் மிக விழிப்புணர்வு நிரம்பிய நாடாக அறியப்பட்ட ஜெர்மனியிலும் வெறுப்புணர்வு வெறியாய் ஆடியதன் விளைவு மர்வா செர்பினி என்ற இளம் தாயின் உயிரை குடித்தது கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி இந்த இதயத்தை ரத்தம் வழியச்செய்யும் நிகழ்வு நடைபெற்றது.ஹிஜாப் அணியும் உரிமைக்காக தனது உயிரை அந்த இளம் பெண் தியாகம் செய்யவேண்டியதாயிற்று.
மேலும் படிக்க
மது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிராமம்!
பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சற்று உள்ளடங்கிய கிராமம் அம்மாப்பட்டினம். ஊர் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள ‘வட்டி தடை செய்யப்பட்ட கிராமம்’ என்ற அறிவிப்புப்பலகையே இக்கிராமத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது. சுமார் 2000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பலருக்குத் தொழில் மளிகை வியாபாரம். மீனவர்கள், விவசாயிகளும் உண்டு.
“எல்லாருமே ஒரு காலத்தில் கடலை நம்பி பொழச்சவங்கதான். எங்கூர்ல இருந்து 12 கி.மீ தான் லங்கா. அந்தக்காலத்துல எங்க மூதாதைங்க, நம்மூர்ல மளிகைச் சாமான்களை வாங்கிட்டு படகுல போயி, லங்கா மலைத்தோட்டங்கள்ல வேலை செஞ்ச மக்கள் கிட்டவித்துவிட்டு வருவாங்க. 83ல நடந்த இனக்கலவரத்துக்குப் பெறவு, இந்த யாவாரம் முடங்கிப்போச்சு. அதுக்குப் பெறவு, தமிழ்நாட்டுல பல இடங்கள்ல மளிகைக்கடையை திறந்துட்டாங்க.
மேலும் படிக்க
Facebook – கிற்கு தடை
சமீபத்தில் பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டது, முஸ்லிம்களை பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும், முகமது நபியைப் பற்றி நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதற்கு உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததன. ஆனால் இன்று நாகரிக நாடாகவும், முழு கல்வி அறிவு பெற்ற ஜனநாயக நாடாகவும் கருதப்படும் ஜெர்மனியில் உலக முழுவதும் வியாபாரம் பரப்பியுள்ள முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க
மாவீரன் மருத நாயகம்
ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்!
காவிரி காவலன்!
மக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.
மேலும் படிக்க
ஆபாச ஆடைகளுக்கு தடை!
நகரத்தின் அந்தஸ்தை நிலைநாட்டவும், குடிமக்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு மனோபாவத்தை உருவாக்கவும் இத்தகைய சட்டங்கள் தேவை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 35 டாலரிலிருந்து 696 டாலர் வரை அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுஷீமீளது. இச்சட்டத்தின்படி நீளம் குறைந்த இறுக்கமான ஜீன்ஸ்கள் அணிய தடை விதிக்கப்படும். கடற்கரையில் குளிப்பது, கால்பந்து விளையாடுவது ஆகியவற்றையும் தடைச் செய்ய திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை வருகிற திங்கள்கிழமை கூடும் மாவட்ட கமிட்டி விவாதிக்கும். நகர மேயரின் தீர்மானத்திற்கு சமூக சேவகர்களும், மதத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது
சரியான நடவடிக்கை என மதப் புரோகிதர் டான் போலோ சிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Tuesday, December 14, 2010
அரஃபா பேருரையும், மனித உரிமைப் பிரகடனமும்!
நற்பண்புள்ளவர்களாக வளர்ந்து வந்த அவர்கள் நம்பிக்கையாளர், உண்மையாளர் என சிறப்புப் பெயர் கொண்டு மக்காவாசிகளால் அழைக்கப்பட்டார்கள். பல கடவுள் கொள்கை, பெண் சிசுக் கொலை, மது, மாது, சூது, நிற, இன, கோத்திர வெறி, தேசியவாதம், சாதியம், அதனால் தொடர் சண்டைகள் போன்ற தீமைகளுக்கு அடிமைகளாகவும் சகோதர வாஞ்சையற்ற எதிரிகளாகவும் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவ வருகை மகத்தான விடியலாய் அமைந்தது.
மக்காவில் 13 ஆண்டுகளாக கடும் எதிர்ப்புக்கும் தொல்லைகளுக்கும் மத்தியில் சீர்திருத்தக் கொள்கையை நிலைநாட்டிய முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கிருந்து சுமார் 450 கி.மீ தொலைவில் உள்ள மதீனாவில் முஸ்லிம்களை குடியமர்த்தினார்கள். தானும் குடியேறி, அங்கே இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாமிய ஆட்சியின் நன்னெறி கண்டு இஸ்லாத்தைத் தழுவலாயினர்.
மேலும் படிக்க
மாநபிகளாரின் மனப்பதிவுகள்
ஐந்தாவது முறை: போர்டுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல் பொதுவாக சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பறைக்கு செல்லும் போது, வரைபடங்கள் எடுத்துச் சென்று பாடங்களை விளக்குவார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத்தான் மாணவர்களும் சரி, பள்ளி நிர்வாகமும் சரி விரும்புகிறார்கள், நேரடியாக சொல்லும் போது புரியவே புரியாத சில சிக்கலான விஷயங்கள் வரைபடங்கள் மூலமாக விளக்கப்படும் போது எளிதில் புரிந்து விடும். வரைபடங்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டாலே அனைத்தையும் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். நவீன கால யுக்தியாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்தமுறை, பதிநான்கு நூற்றாண்டுக்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சியத்திற்குரிய ஒன்று.
மேலும் படிக்க
Monday, December 13, 2010
குர்பானி சட்டங்கள்
குர்பானி கொடுக்கும் நாட்கள்:
குர்பானியை பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் யார்
தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பராஃ(ரலி) நூல்: புகாரி.
மேலும் படிக்க
புனித கஃபாவும், அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களும்…
கஃபாவின் அமைவிடம் : சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஅபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மக்காவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),
அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.
அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.
அல்பைத்துல்ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.
அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19, 28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்: 25, 27).
அல்கஅபா, (அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது
அல்பலத், அல்பல்தா. இந்த ஊர்: (இப்ராஹீம், வச: 35, அந்நம்ல், வச: 91, அல்பலத், 1,2,
அல்பலதுல் அமீன், (அத்தீன், வச: 3), உம்முல்குரா, அல் அன்ஆம், 92, அஷ்ஷ¨ரா, வச:7.
குறிப்பு: கஅபதுல்லாஹ் என்ற சொல்லை நாம் உபயோகித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.
மேலும் படிக்க
மன்மோகன் அரசின் ஏமாற்று வித்தை – ஆசிரியர் பக்கம்
Thursday, December 9, 2010
அயோத்தியத் தீர்ப்பு இரண்டாவது கரசேவை?
அறிவிக்கப்பட்டது
‘அயோத்தியத் தீர்ப்பு’
(சில எழுத்துக்களை
மாற்றிப் படித்தாலும்
தவறில்லை)
நீதிமன்றத்தை
அவமதிப்பது
பெருங்குற்றம்
நீதிமன்றம்
நீதியை அவமதிப்பது…?
மேலும் படிக்க
மாநபி (ஸல்) அவர்களின் மனப் பதிவுகள்!
கேள்விகள் மற்றும் விவாதங்கள் மூலமாக புரியவைத்தல்
ஒரு நல்ல ஆசிரியர் தான் நடத்தும் பாடத்தை முழுமையாக தனது மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய பயனுள்ள முறை இது. ஒருதகவலை சாதாரணமாக தெரிவிப்பதை விட அது சம்பந்தமான கேள்விகள் மற்றும்விவாதங்களை எழுப்பி அந்தத் தகவலை தெரிவித்தால் அது நெஞ்சில் மறக்க முடியாத அளவுக்கு பதிந்து விடும். கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பி அந்த தகவல் தொடர்பான முழுமையான சிந்தனையைத் து£ண்டி விடுவதே இம்முறையின் நோக்கமாகும். இந்த முறையினை பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருப்பதையும் நாம் காண முடிகிறது. நாம் அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான ஒருசெய்தி….
மேலும் படிக்க
வட்டியில்லாத் திட்டத்தை நோக்கி…
ஒரு வருட கால தவணையில் கடன்!- JAQH மதுரை
திண்டுக்கலில் பைத்துல் மால்!
பள்ளிவாசல்கள் தோறும் பைத்துல்மால் வேண்டும்
சிறுசேமிப்புத் திட்டம் பைத்துல்மாலாகியது – த.மு.மு.க. விருதுநகர்
38 வருட சேவையில் தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமியின் வாணியம்பாடி பைத்துல்மால்
வட்டியின் கோரப்பிடியிலும் பொருளாதாரச் சுரண்டலிலும் சிக்கத் தவித்த அரபு மக்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்னரே விடுதலை வழங்கியது இஸ்லாம்.
‘வட்டியை என்னுடைய காலடியில் மிதிக்கிறேன்! கொடுத்த தொகைக்கு அதிகமாக எதையும் இனிமேல் பெறக் கூடாது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் வீர முழக்கம் அன்றைய ஏழைகளுக்கு மறுவாழ்வு தந்தது.
மேலும் படிக்க
மாவீரன் மருத நாயகம்
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.
படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.
காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!
மேலும் படிக்க
Wednesday, December 8, 2010
இஸ்லாம் ஃபோபியா பீதியில் மேற்குலகம்
பொதுவாக போபியா என்பது பய வியாதியை குறிப்பிடும் சொல் என்பது உங்களுக்கு தெரியும் . இருளைக்கண்டால் பயம் உயரத்தைக்கண்டால் பயம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டால் பயம் வகைகள் பயந்த சுபாவம் கொண்ட மனிதர்களை நாளும் அச்சத்திலும் அல்லலிலும் ஆழ்த்தியது தற்போதும் ஆழ்த்தியும் வருகிறது.
சாதாரண நாயைக்கண்டால், இல்லாத பேயைக் கண்டால் பயப்படும் வியாதியைப்போல் இஸ்லாம் போபியாவை அவ்வளவு சாதாரணமாக எடை போட முடியாது. உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளை அது படுத்தி எடுத்திருக்கிறது. இஸ்லாம்போபியா என்பது மேற்குலகில் வாழும் மக்களிடையே ஒரு மன முதிர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தியது.
இஸ்லாத்தை, முஸ்லிம்களை, திருக்குர்ஆனை முஸ்லிம் கலாச்சாரத்தை வேகவேகமாக ஏற்படுத்தி வரும் அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த சூழ்ச்சி மனம் படைத்த கொடியவர்களால் குறிபார்த்து வீசப்பட்ட தந்திரச்சொல் தான் இஸ்லாம்போபியா இஸ்லாம் என்பது குளிர்ச்சி நிறைந்த எழுச்சி நிறைந்த ஓர் நேர்வழிப்பாதை என்பதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த பிற்போக்கு சக்திகள் தாக்குதல் தொடுப்பதற்காகவே இந்த சொல்லாடலை பயன்படுத்து வதாக சமூக நல ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் படிக்க
சமுதாய ஒற்றுமை குலைவு? திருவிடைச்சேரி? நேரடி கள ஆய்வு!
திருவிடைச்சேரியில் நடந்தது என்ன? நேரடி கள ஆய்வு
சமுதாயம் ஒற்றுமையாக வாழ்வதற்காக அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் நேரான வழியை காட்டி இருக்கின்றனர்.
அத்தகைய நேர்வழியின் பக்கம் மக்களை அழைக்கக் கூடிய அழைப்புப் பணியை (தஃவாவை) செய்வதற்கும், ஒரு அழகிய வழி முறை உண்டு.
‘நான் கடவுள்’ என்ற கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய மூஸா (அலை) அவர்களை அனுப்பிய இறைவன் அவனிடம் நளினமாகவே எடுத்துச் சொல்ல சொன்னான்.
(பார்க்க: அல்குர்ஆன் 20:44)
கொடுங்கோன்மையானவனிடமே நானே கடவுள் என்றவனிடமே நளினமாக எடுத்துச் சொல்ல வேண்டுமானால் சக முஸ்லிம் ஜமாஅத் மக்களிடம், இஸ்லாத்தை சரிவர முழுமையாக விளங்காமல் அரைகுறையாக விளங்கியவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கு கடும் போக்கை கையாளலாமா?
இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானம், அமைதி, கட்டுப்பாடு இவைகளை வலியுறுத்தும் மார்க்கம். இதற்காகவே இஸ்லாத்திற்கு வெளியிலுள்ளவர்களும் கூட ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டு இதில் இணைய வருகின்றனர். இணைந்தும் வருகின்றனர். ஆனால், இதனை சிதைக்கும் விதமாகவும், குலைக்கும் விதமாகவும் சில மூடர்கள் அறிவிலிகள் நடந்து கொள்வதால் இஸ்லாத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் மீதே வெறுப்பும், இஸ்லாமிய மக்கள் மீது மோசமான எண்ணமும் ஏற்பட்டு நாளடைவில் அது வளர்ந்து குரோதமாகவும், விரோதமாகவும் உருமாறி சமுதாய மக்களை கருவறுக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவிரித்தாடுகிறது.
இந்த பாரதூரமான நிலைக்கு காரணம் இஸ்லாத்தை தானே சரியாக விளங்காதவர்கள் அரை குறை ஞானத்துடன் அழைப்புப் பணி களத்தில் இறங்கியதே!
மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பதே இல்லை என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 2:256)
முரட்டுத்தனமாக கடுமையாக மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நளினமாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். இல்லையேல் மோசமான விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்.
மேலும் படிக்க
Monday, December 6, 2010
விஞ்ஞான வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு!
வரலாற்றை கொன்றது புராணம்
பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வரலாற்றை சிதைத்துள்ளது
தீர்ப்புகள் திருத்தப்படட்டும்
தீர்ப்புகள் திருத்தப்படட்டும் :- செப்டம்பர் 30: இந்திய நீதிமன்ற வரலாற்றின் கருப்பு தினம் |
---|
பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதிமன்ற வரலாற்றின் ஒரு கரும் புள்ளியாக அமைந்துள்ளது. ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணங்கள், வருவாய் பதிவேடுகள் மற்றும் சட்டப்பூர்வமான ஆதாரங்களுக்கு பதிலாக வெறுமனே ஹிந்துக்களின்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்திற்கு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. டிசம்பர் 6, 1992 எப்படி ஒரு கருப்பு தினமோ அதே போல் விடுதலைப் பெற்ற இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் செப்டம்பர் 30ம் ஒரு கருப்பு தினமாகும்.
450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமாக இருந்த பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கே கோயில் கட்ட சங்பரிவார் அமைப்பினர் தங்கள் மதநம்பிக்கையை தான் முன்வைத்தார்கள். உச்சநீதிமன்றம் பாபர் பள்ளிவாசல் கட்டடத்திற்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று போட்டிருந்த தடை உத்தரவை காலில் போட்டு மிதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கினார்கள். இத்தனை பாதகச் செயல்களையும் அவர்கள் செய்ததற்கு தங்கள் மதநம்பிக்கைத் தான் காரணம் என்று கூறினார்கள். அவர்களது இக்கொடுஞ் செயலை நியாயப்படுத்தும் வகையில் தான் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும் படிக்க
Sunday, December 5, 2010
கண்ணாடிக் கயிறு
பாலியல் கொடுமைகள்
காவி பயங்கரவாதம்
அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் (டிஜிபி) மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை தலைவர்கள் இடையே உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், ‘‘காவி பயங்கரவாதம் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’’ என்று கூறினார். ஒரு உள்துறை அமைச்சர் என்ற வகையில், அவருக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்ப டையில் காவி பயங்கரவாதம் பற்றி பேச அதிகம் உரிமையுடைவர் ப. சிதம்பரம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கைகள் பலவற்றில் நமக்கு முரண் உள்ளபோதிலும், மதவெறி சக்திகளை கண்டறிவதில் அரசு தெளிவாக இருப்பது சமீபத்திய சம்பவங்களால் உணர முடிகிறது. எனினும், குஜராத் போலி என்கவுண்டர் சதிகள் தொடர்பில் மோடி தலைமையிலான பாஜக அரசு சிக்கி சின்னா பின்னமாகி வரும் வேளையில், ‘அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா’, ‘விலைவாசி ஏற்றம்’ போன்ற சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் பாஜக கிளப்பாமல் இருக்க, வெளிப்பட்டு வரும் காவி பயங்கரங்கள், போலி என்கவுண்டர்கள் போன்ற சர்ச்சைகளை காங்கிரஸ் மௌனமாக விட்டுவிட வேண்டும் என்று இரு தரப்புக்குமிடயே அதிகாரப்பூர்வமற்ற கமுக்க உடன்பாடு ஏற்பட்டிருப் பதாக ஊடகங்கள் கசிய விட்டு வரும் செய்திகள் பொய்த்து விட வேண்டும் என்பதே நம் விருப்பம். அது உண்மையாக இருந்துவிடுமானால், சிறுபான்மையினர் வாக்குகளால் தான் ஆட்சி அமைக்க முடிந்தது என்று மேலும் படிக்க
Saturday, December 4, 2010
இந்திய வரலாற்றில் வேலூர் புரட்சி
ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.
டிமேலும் படிக்க
நபிமொழி தரும் பாடங்களும்… படிப்பினைகளும்…
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘‘இல்லை!” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவ ளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். மேலும் படிக்க
Friday, December 3, 2010
இரும்பு மனிதர்கள்!
Thursday, December 2, 2010
‘அலக்’ எனும் அற்புதம்
பெருமானார் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள்
வரலாறும், முக்கியத்துவமும்
Tuesday, November 30, 2010
மகிழ்ச்சியும் மார்க்கம்தான்!
Monday, November 29, 2010
சுன்னாவின் ஒளியில் பெருநாள்
அமைதியைத் தேடி…
Friday, November 26, 2010
கண்ணீர் தேசம்… காஷ்மீரின் வரலாறு
கல்லெறியும் இளைஞர்களும்… இராணுவ அணிவகுப்பு நடத்தும் இந்திய அரசும்
Tuesday, November 23, 2010
போர்க்கள புயல்… திப்பு சுல்தான் – 2
Sunday, November 21, 2010
இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு!
Saturday, November 20, 2010
பர்தாவே பாதுகாப்பு
ஹிஜாப்
(அல்குர்ஆன் 24:31)
மேலும் படிக்க
மேற்குலகை அச்சுறுத்தும் ஆயுதம்! ஹிஜாப்
இஜ்திஹாத் – ஓர் ஆய்வு
Thursday, November 18, 2010
கர்ப்பிணிகள் நோன்பு வைக்கலாமா-?
பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள்.
இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சில தற்காப்புகளை கடைபிடிக்க வேண்டும்.
பகல் நேரங்களில் அதிகமாக ஓய்வெடுக்க வேண்டும். து£க்கத்தின் மூலமாகவோ, அமைதியாக இருப்பதன்
மூலமாகவோ ஓய்வினை மேற்கொள்ள வேண்டும். வேலைகளுக்குச் செல்பவர்களாக இருந்தால், ஒரு பக்கம் வேலைக்கு சென்று கொண்டு, ஒரு பக்கம் வாந்தியும் எடுத்துக் கொண்டு, ஒருபக்கம் நோன்பு வைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். அதனால் இது போன்ற சமயங்களில் அவர்கள் அதிகளவு ஓய்வெடுக்க முயற்சிக்க வேண்டும். நோன்பு துறந்தவுடன் எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக பால், தண்ணீர், ஜூஸ் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
வேர்கள் காய்ந்தாலும் இலைகள் உதிர வேண்டாம்
Sunday, November 14, 2010
பிறை ஒரு பிரச்சனையா?
பிறை ஒரு பிரச்சனையா? - பல அறிஞர்களின் கருத்துக்கள்
- பிறையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் (தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர்)
- ‘‘பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்க வேண்டும்’’ எஸ். கமாலுத்தீன் மதனீ (மாநிலத் தலைவர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்)
- ‘‘சமூக ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும்’’ டாக்டர். ஆர்.கே நூர் மதனீ (இயக்குனர், இப்னுல் கைய்யூம் இஸ்லாமிய ஆய்வுக் கூடம், சென்னை)
- தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்பதே சமூக ஒற்றுமைக்கு உகந்தது! முஃப்தி உஸ்மான் ஹஜ்ரத் (வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி தலைமை முஃப்தி)
- ‘‘கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்!’’ முனைவர். அப்துல்லாஹ் ஜோலம் உமரி மதனீ (முதல்வர், ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரி, உமராபாத்)
- சந்திரக் கணக்கே சரியானது! அலி மனிக்ஃபான் (விண்ணியல் ஆய்வாளர், பிறையியல் நிபுணர்)
- ‘‘பிறையால் ஏற்படும் சமூகக் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும்!’’ மௌலவி முஹம்மது கான் பாக்கவி (தலைமை எடிட்டர், ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை)
- பெருநாளில் பிளவுகள் வேண்டாம் - இணைந்தே கொண்டாடுவோம்! அப்துல் லத்தீஃப் உமரி (ஜித்தா)
- ‘‘ஒற்றுமையில்தான் சமூகப் பாதுகாப்பு!’’ ஹஜ்ரத் இக்பால் காஸிமீ (முதல்வர், வேலு£ர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்)
- ‘‘பிறை பற்றி மறுமை நாளில் நான் விசாரிக்கப்படுவேன் என்ற பொறுப்புணர்வு எனக்குண்டு!’’ டாக்டர். முஃப்தீ காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப், (தமிழக அரசு தலைமை காஜி, சென்னை)
- பிழையில்லா பிறைக் காலண்டர் வரும் வரை அரசு காஜியின் அறிவிப்பையே ஏற்க வேண்டும்! மௌலவி எஸ். கே. சம்சுதீன் (குவைத்) தொழிலதிபர்
பிறையைப் பார்த்து நோன்பு நோற்று பிறையைப் பார்த்து நோன்பை விடுவதே தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் நிலைபாடு! இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை! ஜமாஅத்துல் உலமா சபைக்கும் அரசு தலைமை காஜிக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இரு தரப்பும் இணைந்தே பிறை தொடர்பாக முடிவெடுக்கின்றோம்.
ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவராக செயல்பட்டுவருபவருக்கு பிறைபற்றி தகவலை தெரிவிக்கும் பொறுப்பு ஜமாஅத்தால் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுப்பும் தகவலை பரிசீலித்த பிறகு, அதனை தலைமை காஜிக்கு தெரிவிக்கின்றோம். அவர்கள் அதனை மக்களுக்கு அறிவிக்கின்றார்கள்.
பிறை விஷயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் தொலை பேசிகளில் வரும் தகவல்களை அங்குள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு உறுதி செய்ய வேண்டி யுள்ளது. சில சமயங்களில் பிறை அறிவிப்பு கால தாமதமாவதற்கு இதுவே காரணம்.
இந்த வருடம் ஷஅபான் பிறை பார்க்கப்பட்டு ஜூலை 27ம் தேதி ஷஅபான் பிறை 15 என்று ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதியில் இரவு 9 மணிக்குள் ரமளான் பிறை பற்றி அறிவிப்புச் செய்யும் முயற்சியில் உள்ளோம்.
மேலும் படிக்க
Saturday, November 13, 2010
பெருநாள் மகிழ்ச்சியைத் தேடி…
Friday, November 12, 2010
வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்
ரமளான் மாதத்தில் சுவன வாயில்கள் திறக்கப் பட்டு, நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. வணக்கங் களுக்கு ஏனைய காலத்தில் வழங்கப்படும் நன்மை களை விட பன்மடங்கு அதிகமாக வழங்கப்படு கின்றன. பாவமன்னிப்பும் நரக விடுதலையும் அளிக் கப்படுகின்றன. நல்வழி நோக்கிப் பயணிப்பதற்கு பல வாயில்கள் திறந்துவிடப்படுகின்றன. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் பெற்றிருப்பதற் குக் காரணம் இம்மாதத்தில் அல்குர்ஆன் அருளப்பட்ட துதான்.
‘நிச்சயமாக நாம் அதனை(அல்குர்ஆனை) பாக்கிய முள்ள இரவில் இறக்கினோம்”. 1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்’ (அல்குர்ஆன் 44:3, 97:3) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் படிக்க
Monday, November 8, 2010
Tanzil : Quran Navigator
http://tanzil.info/
Browse, Search, and Listen to the Holy Quran. With accurate quran text and quran translations in various languages.
Tanzil : Quran Navigator
Sunday, November 7, 2010
இது நினைவூட்டும் நேரம்!
உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்!
Saturday, November 6, 2010
வாழ்க்கை ஓர் அமானிதம்
போர்க்கள புயல்… திப்பு சுல்தான்
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன். மேலும் படிக்க
சொந்த ஊருக்கு! Agnosticim அறியவொணாக் கொள்கை
மேலும் படிக்க
அவதூறுகளின் பின்னணியில்… விமர்சனங்கள் – விளக்கங்கள்
மேலும் படிக்க
இஸ்ராவும் மிஃராஜும்
அரபியில் ‘இஸ்ரா’ என்பது இரவில் பயணம் செய்வதைக் குறிக்கும். ‘அல் இஸ்ரா’ என்பது நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவில் ஜிப்றீல்(அலை) அவர்கள் மூலமாக மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
மேலும் படிக்க
பள்ளிவாசலில் பெண்கள் மத்ஹப் நூல்களிலிருந்து…
அதே சமயம் முதிய பெண்மணி ஃபஜ்ர், மக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளில் கலந்து கொள்வதை இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் குறைகாணவில்லை.
மாலிக்கி மத்ஹப் அறிஞர்கள் கூற்றுப்படி, ஆண்களின் இச்சைக்கு ஆளாகும் பருவத்தை தாண்டிய பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவது ஆகுமானதே! அதே போல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வாலிபப் பெண் வருவதும் ஆகுமானதே! விரும்பத்தகாத பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படும் பெண்மணி பொதுவாக (எந்த வயதாக இருந்தாலும்) வரக் கூடாது.
மேலும் படிக்க
பள்ளிவாசலில் பெண்களா?
Friday, November 5, 2010
மருத்துவ துறையின் விபரீதங்கள்
மேலும் படிக்க
போபால்: அநீதி இழைக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதை
போபால் துயரம்
20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கோர அழிவு என்றால் அது போபால் விஷவாயு தாக்குதலாகும். போபால் விஷவாயு தாக்குதல் துயரம் இருபதாம் நூற்றாண்டின் மூன்று சோக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அமெரிக்க வான்படை விமானங்கள் வீசிய அணுகுண்டு வீச்சுக்கு அடுத்த படியாக போபால் விஷவாயு தாக்குதல் இரண்டாம் இடம் பெறுகிறது.
ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சுக்கு அடுத்தபடியாக போபால் விஷவாயு சம்பவமும் ரஷ்யாவின் செர்ணோபில் அணுக் கரு உலை விபத்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.
மேலும் படிக்க
போபால் விபரீதமும் & சுற்றுச்சூழல் பாதுகாப்பும்
மனிதர்களுக்கு பெரும் ஆபத்தாக விளங்கும் இந்த பாதகச் செயல்கள் குறித்து நாம் பாராமுகமாக இருக்க இயலாது. நாம் வாழும் பூவுலகை காப்பாற்றுவது நமது இன்றியமையாத கடமையாகும். எனவே தான் பூவுலகின் சுற்றுச் சூழலை பாதுகாக்க ஏராளமான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை புறக்கணித்து வரம்பு மீறி வாழ்ந்தவர்களின் கதி என்னவானது என்பது குறித்தும் திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது:
மேலும் படிக்க
காய்கள் கனியட்டும்! கனவுகள் மலரட்டும்!
கண்ணியமும் உயர்வும் பாதுகாப்பும் சமுதாய ஒற்றுமையின் நிழலில்தான் கிடைக்கும் என்ற வரலாற்றுச் சுவடுகள் சமுதாய ஒற்றுமையை வாழ்வின் இலட்சியமாக்கின.
முஸ்லிம் சமுதாயத்திடையே நீண்ட காலமாக ஏற்பட்ட பிளவும் பிரிவினையும் சமுதாய பலத்தை குன்றச் செய்தன, எதிரிகள் அதன் மீது ஆதிக்கம் செலுத்த பாதை அமைத்தன என்பதை முஸ்லிம்கள் மறக்கவில்லை.
மார்க்கச் சட்டங்களை சமூகப் பிளவுக்கு காரணமாக்கி எதிரிகள் வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஏகத்துவக் கொள்கை முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டே தீரும் என உட்புறத்திலிருந்து சில தீய குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் படிக்க
வாழ்க்கை ஓர் அமானிதம்
உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் -& மனிதர்களில் எல்லா சாராருக்கும் மூன்று வகையான வாழ்க்கையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
கடவுளை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும், ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் பல கடவுளர்கள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் அனைத்து வகை மனிதர்களுக்குமே மூன்று வகையான வாழ்க்கையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
அதிலொன்று & நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கக் கூடிய ‘துன்யா’ எனும் இவ்வுலக வாழ்க்கை. இது அற்ப வாழ்க்கை.